வில்லங்கமான வெப் தொடரில் நிர்வாணமாக நடிக்கப் போகிறாரா சமந்தா..? கிளம்பிய புது சர்ச்சை
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, வெப் தொடருக்காக நிர்வாண காட்சியில் நடிக்கப்போவதாக சர்ச்சை கிளம்பி உள்ளது.
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்டுள்ள நடிகை சமந்தா, தற்போது மீண்டும் சினிமாவில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ரிலீஸ் ஆன சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து குஷி என்கிற படத்தில் நடித்து வரும் அவர், சிட்டாடெல் என்கிற வெப் தொடரிலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்க உள்ளனர்.
சிட்டாடெல் என்கிற வெப் தொடர் தற்போது ஆங்கிலத்தில் உருவாகி உள்ளது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த வெப் தொடர் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இதற்கான பிரீமியர் நிகழ்ச்சி அண்மையில் லண்டனில் நடந்தது. அதில் நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் வருண் தவான், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரியங்கா சோப்ரா நடித்துள்ள சிட்டாடெல் வெப் தொடர் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட உள்ளது. அதில் பிரியங்கா சோப்ரா கேரக்டரில் சமந்தா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக வருண் தவான் நடிக்க அந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே இயக்க உள்ளனர். நடிகை சமந்தா நடிக்கும் இரண்டாவது வெப் தொடர் இதுவாகும், இதற்கு முன்னர் கடந்த 2021-ம் ஆண்டு பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார். அந்த வெப்தொடரையும் ராஜ் மற்றும் டீகே தான் இயக்கி இருந்தனர்.
இதையும் படியுங்கள்... வழக்கு தொடர்ந்த மகள்... கோர்ட்டு, கேஸ்னு அலையும் ஐஸ்வர்யா ராய் - PS2 புரமோஷனுக்கு வராததுக்கு இதுதான் காரணமா?
ஆங்கிலத்தில் உருவாகி உள்ள சிட்டாடெல் வெப் தொடரில் ஹீரோ - ஹீரோயினுக்கு இடையெயான நெருக்கமான படுக்கையறை ரொமான்ஸ் காட்சியும் உள்ளது. அதில் நடிகை பிரியங்கா சோப்ரா ஆடையின்றி நிர்வாணமாக நடித்துள்ளார். அந்த காட்சிகளும் டீசரில் இடம்பெற்று இருந்தன. சமீபத்திய பேட்டியிலும் அதனை உறுதிப்படுத்தி இருந்தார் பிரியங்கா.
தற்போது அதன் ரீமேக்கில் சமந்தா நடிக்க உள்ளதால், அவரும் அந்த படுக்கயறை காட்சிகளில் ஆடையின்றி நிர்வாணமாக நடிக்கப்போகிறாரா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முன் சமந்தா பேமிலி மேன் 2 வெப் சீரிஸிலும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தது விமர்சனத்துக்குள்ளான நிலையில், தற்போது நிர்வாண காட்சிளுடன் கூடிய வெப் தொடரின் ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகி உள்ளது பேசு பொருள் ஆகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பொன்னியின் செல்வன் 2 புரமோஷனுக்காக சேரநாட்டிற்கு பறந்த சோழர்கள் - வைரலாகும் ஏர்போர்ட் கிளிக்ஸ்