MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Aditi Shankar :ஏற்பாடுகள் தீவிரம்.. ஷங்கரின் 2-வது மகள் அதிதிக்கு திருமணமா? தீயாய் பரவும் தகவல்- பின்னணி என்ன?

Aditi Shankar :ஏற்பாடுகள் தீவிரம்.. ஷங்கரின் 2-வது மகள் அதிதிக்கு திருமணமா? தீயாய் பரவும் தகவல்- பின்னணி என்ன?

Aditi Shankar : இயக்குனர் ஷங்கர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடிகை அதிதிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 31 2022, 05:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஷங்கர் மகளுக்கு திருமணம்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு ஐஸ்வர்யா, அதிதி என இரண்டு மகள்களும், அர்ஜித் என்கிற மகனும் உள்ளார். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் இருந்ததன் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

சினிமாவில் அறிமுகமாகும் அதிதி ஷங்கர்

ஷங்கரின் 2-வது மகள் அதிதி, தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது விருமன் படம் தயாராகி உள்ளது. முத்தையா இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தை நடிகர் சூர்யாவும், நடிகை ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

34

மே மாதம் அதிதிக்கு திருமணமா?

இதனிடையே இயக்குனர் ஷங்கர் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், நடிகை அதிதிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது ஷங்கர் வீட்டில் விரைவில் ஒரு விசேஷம் நடக்கப்போவது உண்மை தான், ஆனால் அது நடிகை அதிதியின் திருமணம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

44

பின்னணி என்ன?

இயக்குனர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எளிமையாக நடத்தினார். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளாராம். வருகிற மே மாதம் நடைபெற உள்ள இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரைப்பிரபலங்களை அழைக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளார் ஷங்கர். மற்றபடி அதிதிக்கு திருமணம் என பரவும் தகவல் முற்றிலும் வதந்தி என தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்... viruman Movie : சர்ச்சையில் சிக்கிய விருமன்... ஷங்கர் மகள் நடித்த முதல் படம் ரிலீசாவதில் சிக்கல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குநர் ஷங்கர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved