viruman Movie : விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.

ஷங்கர் மகள் அறிமுகம்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளார். அவர் இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

சூர்யா தயாரிக்கும் விருமன்

நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.

கதை திருட்டு புகார்

இந்நிலையில், இப்படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. விருமன் திரைப்படம் கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

விருமன் படத்தை அடுத்து நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் முத்தையாவும் தனது அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Actor Jayakumar :கஷ்டப்பட்டு 40 வயதில் ஹீரோவான நடிகர்.. முதல் படம் ரிலீசாகும் முன்பே விபத்தில் பலியான பரிதாபம்