காட்டுத்தீ போல் பரவிய விவாகரத்து விவகாரம்... வேறு வழியின்றி உண்மையை போட்டுடைத்த அசின்
நடிகை அசின் அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
Asin
நடிகை அசின், மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் ஓனர் ராகுல் சர்மா என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. சுமார் ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கு அதிபதியான ராகுல் சர்மாவை கரம்பிடித்த பின்னர் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகினார். திருமணத்துக்கு பின்னர் அவர் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு இந்த ஜோடிக்கு அரின் என்கிற பெண் குழந்தை பிறந்தது.
Asin
குடும்பம், குழந்தை என ஜாலியாக பொழுதை கழித்து வரும் நடிகை அசின், அவரது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக நேற்றில் இருந்து சோசியல் மீடியாவில் ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வந்தது. இதனிடையே அவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி இருந்ததால், எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல் இந்த தகவல் மேலும் வைரல் ஆனது.
இதையும் படியுங்கள்... சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்தா போலீஸ் பார்த்துப்பாங்க - மாமன்னன் படத்திற்கு தடைகோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை அதிரடி
Asin
இந்நிலையில், விவாகரத்து விவகாரம் பூதாகரமானதை அறிந்த நடிகை அசின், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது : “கோடை விடுமுறையை கழித்து வரும் இந்த வேளையில், இருவரும் ஜாலியாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தான் இதுபோன்ற கற்பனையான, அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை பார்க்க முடிந்தது.
Asin
இதைப்பார்க்கும் போது திருமணத்துக்கு முன் நடந்த சம்பவம் தான் ஞாபகம் வருகிறது. நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து திருமண ஏற்பாடுகள் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது நாங்கள் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டதாக சொன்னார்கள். இதைப்பார்த்து நிஜமாவா என சிரித்தோம். இதைவிட எதாவது நல்லதா பண்ணுங்க. இந்த அற்புதமான விடுமுறையில் 5 நிமிடங்களை வீணாக்கியது வருத்தம் அளிக்கிறது” என பதிவிட்டு விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அசின்.
இதையும் படியுங்கள்... நா ரெடி பாடலுக்கு கிளம்பிய எதிர்ப்பால் தளபதி போட்ட உத்தரவு... அதிரடியாக லியோ பட பாடலில் மாற்றம் செய்த லோகேஷ்