- Home
- Cinema
- தியேட்டர்களில் இருந்து தூக்கப்படுகிறதா புஷ்பா 2? அல்லு அர்ஜுன் படத்துக்கு வந்த புது சிக்கல்!
தியேட்டர்களில் இருந்து தூக்கப்படுகிறதா புஷ்பா 2? அல்லு அர்ஜுன் படத்துக்கு வந்த புது சிக்கல்!
Pushpa 2 : அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Pushpa 2
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் கடந்த 2021-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் நடிகை சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.
Pushpa 2 Allu Arjun
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்த படக்குழு, அப்படத்தை கடந்த டிசம்பர் 5ந் தேதி திரைக்கு கொண்டு வந்தனர். இப்படத்தில் சமந்தாவுக்கு பதிலாக ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 14 நாட்களில் 1500 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி வருகிறது.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் சக்கைப்போடு போடும் புஷ்பா 2; அதற்குள் ஓடிடிக்கு வருகிறதா? ரிலீஸ் தேதி இதோ
Pushpa 2 The Rule
புஷ்பா 2 திரைப்படம் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாமல் இந்தியிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அங்கு மட்டும் இப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. எந்த ஒரு இந்தி படம் இவ்வளவு பெரிய தொகையை இந்தி வெர்ஷனில் வசூலித்ததில்லை. அண்மையில் அல்லு அர்ஜுன் கைதான பின்னர் புஷ்பா 2 படத்தின் வசூல் 70 சதவீதம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இதனிடையே புஷ்பா 2 திரைப்படம் வட இந்தியாவில் உள்ள மல்டி பிளக்ஸ்களில் இருந்து தூக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Pushpa 2 in trouble
ஏனெனில் மல்டி பிளக்ஸ்கள் உடனான ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்ததால் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் புஷ்பா 2 படத்தை ஒரேயடியாக தூக்க முடிவெடுத்தனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து புஷ்பா 2 படத்தை தூக்கும் முடிவில் இருந்து மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் பின்வாங்கி உள்ளனர். இதனால் மூன்றாவது வாரத்திலும் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸை புஷ்பா 2 பதம் பார்க்க ரெடியாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சினிமாவின் டிரெண்டையே மாற்றிய கேஜிஎஃப், புஷ்பா படங்கள்: எப்படி, ஏன் ஹீரோக்கள் கடத்தல் வேலை செய்றாங்க?