த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமா? மாப்பிள்ளை யார்... எந்த ஊர்க்காரர் தெரியுமா?
Actress Trisha Wedding: திருமணமே வேண்டாம் என்கிற மனநிலையில் முரட்டு சிங்கிளாக சுற்றிவந்த நடிகை த்ரிஷாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

விவாகரத்தை விரும்பாத த்ரிஷா:
தமிழ் சினிமாவில் கடந்த 22 வருடங்களாக... ஹீரோயினாக மட்டுமே நடித்து வரும் பேரழகி தான் த்ரிஷா. 42 வயதிலும், அழகு மற்றும் ஃபித்னாஸில் 22 வயது ஹீரோயின்களுக்கு சவால் விடும் தோற்றத்தில் உள்ளார். திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்று பிரிவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதால், திருமணம் செய்து கொள்ளாமேலேயே வாழ போவதாக கூறினார். ஆனால் தற்போது த்ரிஷாவின் திருமண ஏற்பாடுகள் களைகட்டி உள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா நடிகை ஆனது எப்படி?
நடிகை த்ரிஷா சினிமாவின் உள்ளே நுழைவதற்கு முன்பு பல அழகி போட்டிகளில் பங்கேற்றுள்ளார். எத்திராஜ் கல்லூரியில் படித்து முடித்த த்ரிஷா... 1999 ஆம் ஆண்டு மிஸ் சென்னை, மிஸ் சேலம் பேஜன்டாக தேர்வானார். பின்னர் மிஸ் இந்தியா 2001 போட்டியில் பியூட்டி ஃபுல் ஸ்மால் என தேர்வு செய்யப்பட்டார். மாடலிங் துறையில் கவனம் செலுத்த துவங்கிய இவருக்கு... திரைப்படங்களிலும் நடிக்க ஆசை வந்தது. திரைப்பட வாய்ப்பை தேட தொடங்கிய த்ரிஷாவுக்கு, தான் இயக்கிய 'ஜோடி' படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்து அறிமுகப்படுத்தியவர் தற்போதைய பிக்பாஸ் போட்டியாளரான பிரவீன் காந்தி தான். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த சிம்ரனுக்கு தோழியாக சில நொடிகள் மட்டுமே வந்து செல்லும் காட்சியில் நடித்தார்.
ராசி இல்லாத நடிகை:
இந்த படத்திற்கு பின்னரே, இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'மௌனம் பேசியதே', மற்றும் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த 'மனசெல்லாம்' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இந்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியதால், ராசி இல்லாத நடிகை என்று இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களால் முத்திரை குத்தப்பட்டார்.
திருப்புமுனையை ஏற்படுத்திய சாமி:
இயக்குனர் ஹரி தான் இயக்கிய 'சாமி' படத்தில் நன்கு தமிழ் பேச கூடிய நடிகையை தேடிய போது தான், த்ரிஷா அவரின் கண்களில் பட... பலர் இந்த நடிகை ராசி இல்லாதவர் என கூறியபோதும் அதை கண்டுகொள்ளாமல் த்ரிஷாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். 'சாமி' திரைப்படம் விக்ரமை விட த்ரிஷா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது.
தூக்கி நிறுத்திய பொன்னியின் செல்வன்:
இந்த படத்தை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் வெளியான லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஜி, ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், போன்ற பல படங்களில் நடித்தார். இடையில் சில வருடங்கள் த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து போன நிலையில்... அதை தூக்கி நிறுத்தியது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த படத்தில் த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
த்ரிஷா கைவசம் உள்ள படங்கள்:
த்ரிஷா நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லீ, தக் லைப் என மூன்று தமிழ் படங்கள் வெளியாகி உள்ளது. அடுத்ததாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள விஸ்வம்பரா , சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கருப்பு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தான் த்ரிஷாவின் பேச்சுலர் லைப்புக்கு முழுக்கும் போடும் விதமாக, இவரது திருமணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஹலோ டேடி... ஆரம்பிக்கலாமா? போட்டோ போட்டு மாதம்பட்டி ரங்கராஜை சீண்டிய ஜாய் கிரிசில்டா
த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார்?
அதாவது நடிகை த்ரிஷாவின் பெற்றோர் எப்படியும் இந்த ஆண்டு, இவருக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்களாம். இவருடைய கண்டீஷன்களுக்கு உட்பட்டு ஒரு வரனையும் பார்த்து மாப்பிள்ளையை முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது. த்ரிஷாவுக்கு பார்த்துள்ள மாப்பிள்ளை, அவரின் குடும்ப நண்பர் தான் என்றும், அவர் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் என கூறப்படுகிறது. இரு தரப்பிலும் திருமண பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், திருமணம் உறுதியாகும் பட்சத்தில் இதுகுறித்து த்ரிஷா தரப்பில் இருந்தே அதிகார பூர்வமாக தெரிவிக்கப்படும் என தெரிகிறது. இது உண்மையா அல்லது வழக்கம் போல் வதந்தியா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.