MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மஞ்ச சேலையில் த.வெ.க மாநாட்டுக்கு வருகிறாரா திரிஷா? குவியும் கேரவன்கள் யாருக்கு?

மஞ்ச சேலையில் த.வெ.க மாநாட்டுக்கு வருகிறாரா திரிஷா? குவியும் கேரவன்கள் யாருக்கு?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டில் நடிகை திரிஷாவும் கலந்துகொள்ள உள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்ட வண்ணம் உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 27 2024, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vijay, Trisha

Vijay, Trisha

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். இந்தக் கட்சி தொடங்கிய வேகத்தில் அதற்கான உறுப்பினர் சேர்க்கையும் ஆன்லைனில் நடைபெற்றது. லட்ச்சக்கணக்கிலான ரசிகர்கள் அதில் நிர்வாகிகளாக சேர்ந்து விஜய்க்கு தன் ஆதரவுக் கரத்தை நீட்டினர். இதையடுத்து அக்கட்சியில் கொடி அறிமுக விழாவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள த.வெ.க கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
TVK Vijay

TVK Vijay

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தை கொண்டு அமைக்கப்பட்டு உள்ளது. அதில் யானை மற்றும் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்று உள்ளன. இந்தக் கொடிக்கான அர்த்தம் என்னவென்று தவெக கட்சியின் முதல் மாநாட்டில் அறிவிப்பதாக நடிகர் விஜய் கூறி இருந்தார். இதையடுத்து அந்த மாநாடு எப்போது நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், அக்டோபர் 27-ந் தேதி நடத்தப்படும் என்கிற அறிவிப்பு வெளியானது.

36
TVK Maanadu vikravandi

TVK Maanadu vikravandi

அதன்படி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலை என்கிற கிராமத்தில் தான் தவெக மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டிற்கான பணிகள் சுமார் ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று மாலை மாநாடு படு பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... விக்ரவாண்டியில் த.வெ.க மாநாடு; திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்!

46
TVK Maanadu

TVK Maanadu

தவெக மாநாடு நடிகர் விஜய்யின் முதல் மாநாடு என்பதால், அதில் தன்னுடைய அரசியல் கொள்கைகளை எல்லாம் விஜய் இந்த மாநாட்டில் தான் அறிவிக்க இருக்கிறார். இதனால் இந்த மாநாட்டை ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர். இந்த தவெக மாநாட்டில் நடிகர் விஜய் 2 மணிநேரம் உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் ஏராளமான பிரபலங்களும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் கசிந்துள்ளன.

56
TVK Maanadu

TVK Maanadu

அவர்களுக்காகவே மாநாட்டு திடல் அருகே கேரவன்கள் வரிசைகட்டி நின்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு ட்விஸ்டாக நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் நேற்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதில் கையில் தேன்குழல் முறுக்குடன் காரில் பயணிப்பதாக போட்டு, ஒரு கொடியையும் பதிவிட்டு இருந்தார். அது தவெக கொடி போல் சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருந்ததால் நடிகை திரிஷா தவெக மாநாட்டுக்கு கிளம்பிவிட்டதாக கூறி அந்த புகைப்படத்தை வைரலாக்கினர்.

66
Trisha Insta Story

Trisha Insta Story

ஆனால் உண்மையில் நடிகை திரிஷா தவெக மாநாட்டுக்கு வரவில்லை. அவர் தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டில் உள்ளார். அங்கு காரில் சென்றபோது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவர் ஸ்பெயின் நாட்டு கொடியை போஸ்ட் செய்திருந்தார். தவெக கொடியும் அதே நிறத்தில் இருந்ததால் நெட்டிசன்கள் கன்பியூஸ் ஆகி திரிஷா தவெக மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளதாக கூறி வந்தனர்.

இதையும் படியுங்கள்... தளபதி விஜயின் த.வெ.க மாநாடு; 70 அடி பிரம்மாண்ட கட்அவுடில் 2 முக்கிய பெண் தலைவர்கள்! வைரல் பிக்ஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழக வெற்றி கழகம்
தளபதி விஜய்
திரிஷா
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved