MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தளபதி விஜயின் த.வெ.க மாநாடு; 70 அடி பிரம்மாண்ட கட்அவுடில் 2 முக்கிய பெண் தலைவர்கள்! வைரல் பிக்ஸ்!

தளபதி விஜயின் த.வெ.க மாநாடு; 70 அடி பிரம்மாண்ட கட்அவுடில் 2 முக்கிய பெண் தலைவர்கள்! வைரல் பிக்ஸ்!

TVK Maanadu : தளபதி விஜயின் தமிழாக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகின்ற ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Ansgar R
Published : Oct 25 2024, 09:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
TVK Maanadu

TVK Maanadu

தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய், தன்னுடைய தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக சில தகவல்கள் வெளியாகி வந்தது அனைவரும் அறிந்ததே. இப்படி திரையுலகில் உச்சபட்ச நடிகராக இருக்கின்ற நேரத்தில் நான் தனது அரசியல் கட்சியை தமிழக மக்களுக்கு தளபதி விஜய் அறிவித்திருக்கிறார். அது மட்டுமல்ல ஏற்கனவே தான் ஒப்புக்கொண்டுள்ள திரைப்பட பணிகளை முடித்த பிறகு, தன்னுடைய சினிமா பயணத்திற்கு அவர் முழுமையாக ஓய்வு கொடுக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. உண்மையில் இந்த ஒரு விஷயம் தான் தளபதி விஜயின் மாஸ்டர் ஸ்ட்ரோக்காகவே பார்க்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. ஒரு மிகச்சிறந்த அரசியல் தலைவராக அவர் தமிழகத்தில் வளம் வருவார் என்று பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

School Holiday: ஹேப்பி நியூஸ்! நவம்பர் 7ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

24
Thalapathy vijay

Thalapathy vijay

அண்மையில் தளபதி விஜய் கட்சி தொடங்கியது குறித்து பேசிய பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி, நடிகர் விஜய் ஒன்றும் திரையுலகில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. இப்போதும் அவர் ஓகே என்று சொன்னால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவரை வைத்து திரைப்படம் எடுக்க மிகவும் ஆவலாக இருந்து வருகின்றனர். ஆனால் இப்படி தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக தளபதி விஜய் இருந்து வரும் இந்த சூழலில் தான், அவர் இப்பேற்பட்ட கலை உலகை விட்டுவிட்டு, மக்கள் பணிக்காக அரசியலுக்கு செல்கிறார். நிச்சயம் அவருக்கு நான் உறுதுணையாக நிற்பேன் என்று பேசி இருந்தார். இந்த சூழலில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 27 ஆம் தேதி தளபதி விஜயின் முதல் மாநில மாநாடு நடக்க உள்ளது.

34
Maanadu

Maanadu

விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நாளை மறுநாள் லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் இதற்கான அரங்கம் அமைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிந்துள்ள நிலையில், இந்த மாநாட்டில் இடம்பெற்றுள்ள 70 அடி கட்டவுட் ஒன்று பலரது கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது என்றே கூறலாம். காரணம் இந்த போஸ்டரில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் போன்ற பெரும் தலைவர்களுடைய போஸ்டர்களுக்கு மத்தியில் இரண்டு முக்கிய பெண் தலைவர்களின் போஸ்டர்களும் வைக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக காந்தியால் ஜான்சி ராணி என்று அன்போடு அழைக்கப்பட்ட அஞ்சலை அம்மாள் அவர்களின் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பல பெண்களின் முக்கியமானவர் அஞ்சலை அம்மாள். கடலூரில் பிறந்து இந்திய விடுதலைக்காக சுமார் 7.5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் அவர். 

44
TVK Maanadu

TVK Maanadu

அது மட்டும் இல்லாமல் வீரத்திற்கு பெயர் பெற்ற வேலு நாச்சியாரின் போஸ்டரும் இந்த கட்அவுடில் இடம் பெற்று இருக்கிறது. 1730 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த இவர், 1796 ஆம் ஆண்டு தன்னுடைய 66 வது வயதில் சிவகங்கையில் காலமானார். ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரத்துடன் போராடிய பல வீர மங்கைகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் வேலு நாச்சியார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிவகங்கை ராணி என்பதும் அனைவரும் அலறிந்த உண்மை. இவர்கள் இருவரின் போஸ்டர்கள் இடம்பெற்றுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அப்போ தளபதி 70 இருக்கா? பிரபல இயக்குனர் செய்யப்போகும் மாஸ் சம்பவம் - வெளியான செய்தி நிஜமா?

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved