வணங்கானை தொடர்ந்து வாடிவாசலில் இருந்தும் வெளியேறுகிறாரா சூர்யா..? தீயாய் பரவும் தகவல் - பின்னணி என்ன?
வணங்கான் படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில் இருந்தும் நடிகர் சூர்யா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் சூர்யாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதேபோல் இயக்குனர் பாலா இயக்கிய வணங்கான் படத்தையும் கைவசம் வைத்திருந்த சூர்யா, சமீபத்தில் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். கதையில் செய்யப்பட்ட மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாததால் அவர் இப்படத்தில் இருந்து விலகுவதாக பாலாவே அறிக்கை வாயிலாக அறிவித்தார். தற்போது அப்படத்தில் சூர்யாவுக்கு பதிலாக நடிகர் அருண்விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... பிரபல நடிகை கனகா வீட்டில் தீ விபத்து..! துணிமணிகள் எரிந்து நாசம்..!
சூர்யா கைவசம் உள்ள மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் தான் வாடிவாசல். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகள் ஆனபோதும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இடையே டெஸ்ட் ஷூட் மட்டும் நடத்தினார்கள். அதன்பின் இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.
இதனிடையே நேற்று திடீரென வாடிவாசல் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் வாடிவாசலும் ஒன்று. அதிலிருந்து சூர்யா எப்படி விலக முடிவு செய்தார் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் எல்லாம் நடக்கத் தொடங்கின.
ஆனால் அப்படக்குழு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சூர்யா நடிப்பில் வாடிவாசல் திட்டமிட்டபடி உருவாகும் என்றும், சிவா படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்னர் சூர்யா வாடிவாசல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி அப்படம் குறித்த முக்கிய அப்டேட்டும் இன்று வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... பீஸ்ட் வீரராகவன், வலிமை அர்ஜுன் குமார் என 2022 ஆம் ஆண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த டாப் 10 கதாபாத்திரங்கள்!