- Home
- Cinema
- ஐபிஎல் முதல் ஆர்யன் வரை... நவம்பர் 28ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
ஐபிஎல் முதல் ஆர்யன் வரை... நவம்பர் 28ந் தேதி தியேட்டர் & ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
டிடிஎஃப் வாசன் நடித்த ஐபிஎல் திரைப்படம் முதல் விஷ்ணு விஷாலின் ஆர்யன் வரை வருகிற நவம்பர் 28-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Theatre and OTT Release Movies on November 28
நவம்பர் 28ந் தேதி தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. கீர்த்தி சுரேஷ், தனுஷ் இவர்களுடன் இளம் நாயகன் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் அன்றைய தினம் ஓடிடியிலும் ஏராளமான புதுப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்
தேரே இஸ்க் மெய்ன்
நவம்பர் 28-ந் தேதி தனுஷ் நடித்த இந்தி திரைப்படமான தேரே இஸ்க் மெய்ன் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
ரஜினி கேங்
ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரஜினி கேங். ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் முனீஸ்காந்த், கூல் சுரேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 27ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
டிடிஎஃப் வாசன் படம் ரிலீஸ்
ஐபிஎல்
யூடியூபர் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஐபிஎல். இப்படத்தில் கிஷோர், அபிராமி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இப்படமும் நவம்பர் 28ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
பிரைடே
தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘பிரைடே' திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ஹரி வெங்கடேஷ் இயக்கி உள்ளார்.
அஞ்சான் ரீ-ரிலீஸ்
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி நடிப்பில் வெளியான படம் அஞ்சான். இப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதைக்கொண்டாடும் விதமாக அப்படத்தை நவம்பர் 28ந் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளனர். ரீ-எடிட் செய்யப்பட்டு இப்படத்தை ரீரிலீஸ் செய்ய உள்ளனர்.
இந்த வாரம் என்னென்ன படம் ரிலீஸ்?
ரிவால்வர் ரீட்டா
ஜேகே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ரிவால்வர் ரீட்டா. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படமும் நவம்பர் 28-ந் தேதி திரைக்கு வருகிறது.
பிபி 180
ஜேபி இயக்கத்தில் டேனியல் பாலாஜி, தன்யா ரவிச்சந்திரன், கே பாக்கியராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் பிபி 180. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் நவம்பர் 28 அன்று திரைக்கு வருகிறது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் திரைப்படம் வருகிற நவம்பர் 28-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர ரேகை என்கிற வெப் தொடரும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ள இந்த வெப் தொடரில் பிக் பாஸ் பவித்ரா நடித்துள்ளார். இந்த வெப் தொடர் ராஜேஷ்குமாரின் நாவலை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இதுதவிர அனுபமா பரமேஸ்வரன் நடித்த தி பெட் டிடெக்டிவ் திரைப்படம் ஜீ5 ஓடிடியிலும், சசிவதனே என்கிற தெலுங்கு படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
