மகனாக இருந்து மாமனார் ரோபோ சங்கருக்கு இறுதி காரியம் செய்த மருமகன்!
Indraja Husband Karthik performs funeral for Robo Shankar : ஒரு மகனாக இருந்து மொட்டையடித்து கொண்டு மாமனார் ரோபோ சங்கருக்கு இந்திரஜாவின் கணவர் இறுதி சடங்கு செய்துள்ளார்.

ரோபோ சங்கர் காலமானார்
ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எப்போதும் தன்னை சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இன்று ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்ற நிலையில் பிரபலங்கள் கண்ணீர் கடலில் அவரது இல்லத்தை சூழ்ந்தனர். பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தனர்.
ரோபோ சங்கர் மருமகன்
தனது கடின முயற்சியின் மூலமாக முன்னேறிய சினிமா துறையில் சாதனை படைத்தவர் ரோபோ சங்கர். அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா, விஜய் என்று மாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதில் விஸ்வாசம், வேலைக்காரன், மாரி, சி3, புலி ஆகிய படங்களில் மாஸ் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
கடும் கோபத்தில் ரேவதி - காதலை வெளிப்படுத்தினானா கார்த்திக்? கார்த்திகை தீபம் அப்டேட்!
ரோபோ சங்கர் குடும்பம்
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் ரோபோ சங்கர். ஒரு நடிகராக மட்டுமின்றி டான்ஸர் மற்றும் ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் கலக்கியுள்ளார். இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தர்மசக்கரம் படத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார். ஆனால், இந்தப் படத்தில் அவரது ரோல் பேசப்படவில்லை. இதே போன்று பேசப்படாத படையப்பா, ஜூட், உயிரோசை, ஏய், கற்க கசடற, சென்னை காதல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இது தவிர விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராகவும், சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்றுள்ளார். பின்னணி பாடலும் பாடியுள்ளார். இந்த நிலையில் தான் சென்னையில் நடந்து வந்த காட்ஸ்ஜில்லா படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல், ரசிகர், பிரபலங்களின் கண்ணீர் கடலில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்!
ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம்
சிகிச்சையின் போது உடல்நிலை மோசமடையவே தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்று கடைசியாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவு பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார். ஏற்கனவே மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து மீண்டு வந்தார். அப்போது அவர் உடல் மெலிந்து விமர்சனத்திற்கு உள்ளாகும் வகையில் இருந்தார்.
இந்த நிலையில் தான் நேற்று இரவு உயிரிழந்தார். ரோபோ சங்கருக்கு மகன் இல்லாத நிலையில் மகள் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் தான் மகனாக இருந்து தனது மாமனாருக்கு இறுதி சடங்கை செய்துள்ளார். ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலத்தின் போது தீ பந்தம் ஏந்தி வந்த அவர் மொட்டை போட்டுக் கொண்டு அவரது உடலுக்கு இறுதி சடங்கை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிருந்தாவனம் மின் மயானத்தில் ரோபோ சங்கரின் இறுதி சடங்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
உஷார்!!! ரோபோ ஷங்கர் செத்ததே இதனால் தான்; தயவு செய்து அலட்சியப்படுத்தாதீங்க!