- Home
- Cinema
- ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல், ரசிகர், பிரபலங்களின் கண்ணீர் கடலில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்!
ஓடி ஓடி உட்கலந்த ஜோதி பாடல், ரசிகர், பிரபலங்களின் கண்ணீர் கடலில் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம்!
Robo Shankar Last Rites : காமெடி நடிகர் ரோபோ சங்கரின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. வளரசவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

ரோபோ சங்கரின் மறைவு
ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ரசிகர்களை மட்டுமின்றி சினிமா பிரபலங்களையும் சிரிக்க வைத்து ரோபோ சங்கர் இன்று அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்க அவரால் சிரிப்பலையில் மூழ்கிய பிரபலங்கள், ரசிகர்கள் இன்று அழுது கொண்டிருக்கின்றனர். மதுரையைச் சேர்ந்த ரோபோ சங்கர் தனது கடின உழைப்பின் மூலமாக சினிமாவில் முன்னேறியவர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த மனிதர் இன்று நம்முடன் இல்லை என்று எண்ணும் போது மனம் வேதனை அடைகிறது.
உஷார்!!! ரோபோ ஷங்கர் செத்ததே இதனால் தான்; தயவு செய்து அலட்சியப்படுத்தாதீங்க!
திடீரென்று மயங்கி விழுந்த ரோபோ சங்கர்
சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை அவரது உடல் நிலை மோசமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
கோமா நிலைக்கு சென்ற ரோபோ சங்கர்
எனினும், மருத்துவர் அளித்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அவரது உடலின் ஒவ்வொரு பாகங்களும் செயலிழந்து கடைசியாக கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று மருத்துவ வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். ரோபோ சங்கரின் மறைவு சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன் சூப்பரா? சுமாரா? முழு விமர்சனம் இதோ
ரோபோ சங்கர் மறைவு - பிரபலங்கள் அஞ்சலி
ரோபோ சங்கர் மறைவைத் தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன், சீமான், ஐஸ்வர்யா, ராதாரவி, பிரியா பவானி சங்கர், மாகாபா ஆனந்த், தங்கதுரை, புகழ், டிஎஸ்கே, மதுரை முத்து, எஸ் ஏ சந்திரசேகர் என்று ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து தற்போது ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது. வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட இருக்கிறது.
The Last Words of #RoboShankar in his Last Show ( 2 Weeks Back ) 💔💔 pic.twitter.com/02GAfiN3j2
— Let's X OTT GLOBAL (@LetsXOtt) September 18, 2025
ரோபோ சங்கர் இறுதி ஊர்வலம்
இறுதி ஊர்வலத்தின் போது ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய் என்ற சிவவாக்கியரின் பாடலுடன் இறுதி ஊர்வலம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.