என்னது ஒரு படத்துல 72 பாடல்களா! அதிக பாடல்களை கொண்ட அந்த படம் எது தெரியுமா?
தற்போதைய காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் படமெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு படத்தில் மட்டும் 72 பாடல்கள் உள்ளதாம். அது எந்த படம் என்பதை பார்க்கலாம்.
Movies Had Most Songs
பாடல்கள் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே உள்ளது. சோகமாக இருந்தாலும் சரி, சந்தோஷமாக இருந்தாலும் சரி அனைத்து மனநிலைக்கும் ஏற்ப விதவிதமான பாடல்கள் இருக்கின்றன. தற்போதைய காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் படம் எடுக்கப்பட்டு வருகின்றன. 90களில் பாடல்களுக்கு இருந்த மவுசு தற்போதைய காலகட்டத்தில் படிப்படியாக குறைந்து வருகிறது. அப்படி இருக்கையில் அதிக பாடல்களை கொண்டு உருவான திரைப்படம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Movie had the maximum number of songs
அதன்படி 1936-ல் இந்தியில் வெளிவந்த இந்திர சபா என்கிற திரைப்படம் தான் அதிக பாடல்களை கொண்ட படமாகும். இப்படத்தில் மொத்தம் 72 பாடல்களாம். இப்படத்திற்கு நாகர்தாஸ் நாயக் என்பவர் இசையமைத்து இருந்தார். இந்த 72 பாடல்களையும் அவர் தான் கம்போஸ் செய்திருந்தாராம். இந்திர சபா திரைப்படத்தை ஜமாஹெட்ஜி இயக்கி இருந்தார். இப்படம் உருது மொழியில் போடப்பட்ட மேடை நாடகத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்ததாம்.
இதையும் படியுங்கள்... இளையராஜாவுக்கு தெரியாமலேயே அவர் பாட்டை காப்பியடிச்சு யுவன் போட்ட மெகா ஹிட் பாடல்!
Indra Sabha
அதிக பாடல்களை கொண்ட படம் என்கிற சாதனையை படைத்துள்ள இந்திர சபா திரைப்படம் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்று உள்ளதாம். இப்படம் கடவுளின் அரசனான இந்திராவை பற்றி எடுக்கப்பட்டது. ஆனால் இந்திர சபாவை விட அதிக பாடல்களை கொண்ட படம் ஒன்று இருக்கிறது. அப்படத்தின் பெயர் பசந்த் ராசா. ஒடியா மொழியில் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த 1984-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் மொத்தம் 81 பாடல்களாம்.
sangeet Sudhakar
இந்த 81 பாடல்களுக்கும் சங்கீத் சுதாகர் பாலகிருஷ்ண தாஸ் தான் இசையமைத்து இருந்தார். பசந்த் ராசா படத்தில் 81 பாடல்கள் இருந்தும் இந்திர சபா திரைப்படம் தான் அதிக பாடல்களை கொண்ட படமாக கொண்டாடப்படுகிறது. அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. பசந்த் ராசா படத்தில் 81 பாடல்கள் இருந்தாலும் அதன் மொத்த நீளம் 3 மணிநேரம் 40 நிமிடம் மட்டும் தானாம். ஆனால் இந்திர சபா படத்தின் பாடல்கள் மொத்தமாக 4 மணிநேரம் 34 நிமிடங்கள் ஓடக்கூடியவை என்பதால் அந்த சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... அட நம்புங்கப்பா.. நடிகர் சூர்யா சொந்த குரலில் இத்தனை பாடல்களை பாடியிருக்காராம்!