Oscars 2023: வேட்டி - சேலையில் ஆஸ்கர் நிகழ்ச்சியில் மாஸ் காட்டிய இந்திய பிரபலங்கள்
எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் மற்றும் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் படமாக்கப்பட்ட தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம், தெலுங்கில் உருவான ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலும் ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட இந்திய பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரித்து, கார்த்திகி கொன்சால்வ் இயக்கியிருக்கும் "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படம், சிறந்த ஆவணப் படத்துக்கான விருதினை வென்றுள்ளது.
ராம் சரண் மற்றும் உபாசனா காமினேனி கொனிடேலா தம்பதியின் ஸ்டைலிஷ் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஆஸ்கர் விருது விழாவில் ராம் சரணுடன் உபாசனாவும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜமெளலி வேட்டியும், அவரது மனைவி ரமா ராஜமெளலி சேலையும் அணிந்து ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்டதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.