- Home
- Cinema
- ஓடிடியில் நவம்பர் 14ந் தேதி செம விருந்து வெயிட்டிங்... டியூட் உள்பட இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
ஓடிடியில் நவம்பர் 14ந் தேதி செம விருந்து வெயிட்டிங்... டியூட் உள்பட இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
நவம்பர் 14-ந் தேதி தியேட்டரைவிட ஓடிடியில் தான் அதிகப்படியான திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. இந்த வாரம் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

This Week OTT Release Movies
டியூட் (Dude)
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்து வெற்றிநடைபோட்ட திரைப்படம் டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மமிதா பைஜு ஹீரோயினாக நடித்திருந்தார். திரையரங்குகளில் 100 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய டியூட் திரைப்படம் நவம்பர் 14ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எ மெர்ரி லிட்டில் எக்ஸ்-மாஸ் (A Merry Little Ex-Mas)
கிறிஸ்துமஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த ஹாலிடே காமெடி படத்தில் அலிசியா சில்வர்ஸ்டோன், ஆலிவர் ஹட்சன், ஜமீலா ஜமீல் ஆகியோர் நடித்துள்ளனர். கேட், எவரெட் தம்பதி விவாகரத்துக்குப் பிறகும் ஒரு கடைசி குடும்ப விடுமுறையை ஒன்றாகக் கழிக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் விதி அவர்களுக்கு வேறு ஒரு ஆச்சரியத்தை வைத்திருக்கிறது. நவம்பர் 12ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது
இன் யுவர் ட்ரீம்ஸ் (In Your Dreams)
அலெக்ஸ் வூ இயக்கிய அமெரிக்க அனிமேஷன் அட்வென்ச்சர் காமெடி படம். குடும்ப பொழுதுபோக்கை விரும்பும் ரசிகர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும். நவம்பர் 14ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
டெல்லி க்ரைம் சீசன் 3 (Delhi Crime Season 3)
டெல்லி க்ரைம் சீரிஸின் மூன்றாவது சீசன் வருகிறது. இதில் ஹுமா குரேஷி புதிய வில்லியாகத் தோன்றுகிறார். ஷெஃபாலி ஷா மீண்டும் டிசிபி வர்திகா சதுர்வேதி பாத்திரத்திலும், ஜெயா பட்டாச்சார்யா விமலா பரத்வாஜ் ஆகவும் நடிக்கின்றனர். நவம்பர் 13ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் பார்க்கலாம்.
தி பீஸ்ட் இன் மீ (The Beast In Me)
கிளேயர் டேன்ஸ், மாத்யூ ரைஸ், பிரிட்டானி ஸ்னோ நடித்த இந்த த்ரில்லர், ஒரு எழுத்தாளரின் வாழ்க்கையில் நுழையும் ஆபத்தான பக்கத்து வீட்டுக்காரரைச் சுற்றி சுழல்கிறது. கொலைகளுக்குப் பின்னால் அவர் இருக்கிறாரா என்ற மர்மம் கதாநாயகியை ஒரு மைண்ட் கேமிற்குள் இழுக்கிறது. நவம்பர் 13ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடிக்கு வருகிறது.
லாஸ்ட் சாமுராய் ஸ்டாண்டிங் (Last Samurai Standing)
ஜப்பானின் மெய்ஜி காலத்தின் (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) பின்னணியில், ஷோகோ இமாமுராவின் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இது கியோட்டோ நகரில் உள்ள டென்ரியுஜி கோவிலில் நடக்கும் சாமுராய் வீரர்களின் கதை. ஜுனிச்சி ஒகாடா, யுயாமியா புஜிசாகி, கயா கியோஹாரா ஆகியோர் நடித்துள்ளனர். நவம்பர் 13ந் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் (Jurassic World Rebirth)
உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படம், ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன் (2022) படத்தின் தனித்துவமான தொடர்ச்சியாகும். இது ஜுராசிக் பார்க் பிரான்சைஸின் ஏழாவது படம். ஸ்கார்லெட் ஜோஹன்சன், மஹர்ஷலா அலி, ஜொனாதன் பெய்லி ஆகியோர் நடித்துள்ளனர். மூன்று டைனோசர் இனங்களின் டிஎன்ஏ-வை சேகரிக்க ஒரு விஞ்ஞானிகள் குழு ஆபத்தான தீவுக்குப் பயணிக்கிறது. நவம்பர் 14ந் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
இன்ஸ்பெக்ஷன் பங்களா (Inspection Bungalow)
அரவாங்கட் காவல் நிலையத்திற்கு இடம் தேடும் ஒருவர், காட்டில் உள்ள ஒரு பழைய இன்ஸ்பெக்ஷன் பங்களாவைத் தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அந்த கட்டிடம் சபிக்கப்பட்டது என்ற வதந்திகள் அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகின்றன. இது ஒரு ஹாரர், சஸ்பென்ஸ் படம். நவம்பர் 14ந் தேதி ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்
ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை
தசாவதார் (Dashavatar)
சுபோத் கனோல்கர் இயக்கிய இந்த மராத்தி த்ரில்லரில் திலீப் பிரபாவல்கர், பரத் ஜாதவ், மகேஷ் மஞ்ச்ரேக்கர், சித்தார்த் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். வயதான தசாவதார் நடிகர் தனது கடைசி நாடகம் மூலம் ஆன்மீக மற்றும் கலாச்சாரப் போரில் சிக்குகிறார். நவம்பர் 14ந் தேதி ஜீ5-ல் காணலாம்.
கே ராம்ப் (K Ramp)
கிரண் அப்பாவரம், யுக்தி தரேஜா ஜோடியாக நடித்த 'கே ராம்ப்' திரைப்படம் திரையரங்குகளில் பரவாயில்லை என பெயர் பெற்றது. இப்போது ஓடிடியில் ரசிகர்களை மகிழ்விக்கத் தயாராகி வருகிறது. நவம்பர் 15ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.