'ஜனநாயகன்' ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம் - வெறித்தன அப்டேட்!
Thalapathy Vijay Jananayagan OTT Rights: தளபதி விஜய் நடித்து முடித்துள்ள, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கனத்த மனதுடன் விஜய் எடுத்த முடிவு:
தளபதி விஜய், தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன் ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தளபதியின் கடைசி திரைப்படம் இது என்பதை... ரசிகர்களின் மனசு எளிதில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தளபதியும் கனத்த மனதுடன் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். தன்னுடைய அரசியல் பயணத்திற்கு சினிமா ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார்.
இது நிரந்தர முடிவா?
அதே நேரம் இது நிரந்தர முடிவா? அல்லது தற்காலிக முடிவா என்பதை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் தான் முடிவு செய்யும் என்பது சில அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருந்து வருகிறது. கடந்த சில வருடமாக விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் ரூ. 500 கோடி அளவுக்கு வசூல் செய்யும் நிலையில், இந்த படம் கோலிவுட் திரையுலகின் முதல் ரூ.1000 கோடி படம் என்கிற சாதனையை படைக்குமா? என்பதும் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
விஜய்யின் சம்பளம்:
இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, மமிதா பைஜூ முக்கிய ரோலில் நடித்துள்ளார். சுமார் 350 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு விஜய்க்கு மட்டுமே ரூ.275 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
பகவத் கேசரி ரீமேக்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தில் போஸ்டர் ஒன்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில், நேற்றைய தினம் 'தளபதி கச்சேரி' என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியானது. நடிகர் விஜய் அவர் கெரியரில் பாடிய கடைசி பாடல் இது எனலாம். இந்த பாடலை பார்த்த பின்னர் ரசிகர்கள் பலரும், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான பகவத் கேசரி திரைப்படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பதை உறுதி செய்து விட்டனர்.
ஜனநாயகன் படத்தை கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்:
மேலும் இப்பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே லட்ச கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு, லைக்குகளை குவித்து வருகிறது. இதை தொடர்ந்து ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக வெறித்தன அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ஜனநாயகன் திரைப்படம், திரையரங்கில் ரிலீஸ் ஆன பின்னர் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகும் என்கிற தகவல் தான் வெளியாகி உள்ளது. அதன்படி, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை, அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாம். எனவே அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.