வெற்றிமாறன் என்னை ஏமாத்திட்டாரு... விடுதலை இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பரபரப்பு பேச்சு
விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் விடுதலை. இப்படத்தில் நடிகர் சூரியும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் தன்னை ஏமாற்றியதாக தெரிவித்தார். அதில் அவர் பேசியதாவது : “சூரியின் பேச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது பேச்சை கேட்டு நான் மயங்கிட்டேன். 8 நாள் இந்த படத்துல நடிக்க வாங்கனு கூட்டிட்டு போய் என்னை ஏமாற்றியவர் தான் வெற்றிமாறன். நான் வட சென்னையில் நடிக்க வேண்டியது, மிஸ் பண்ணிட்டேன் என கூறினார்.
அப்போது ரசிகர்கள் வட சென்னை பார்ட் 2 எப்போ என கத்தியதும், வெற்றிமாறன் இப்போ தான் அதற்கான கதை எழுதிக்கொண்டி இருப்பதாகவும் சீக்கிரமாகவே வந்திரும் என கூறினார் விஜய் சேதுபதி. யார் யாரோ யூடியூபில் ஏதேதோ சொல்றாங்க, நானும் சொல்லி வைக்கிறேன் சார்னு விஜய் சேதுபது சொன்னதும், வெற்றிமாறன் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
இதையும் படியுங்கள்... பாலிவுட்டின் பாலா.. சேது பட ரீமேக்கை இயக்கிய பிரபல இயக்குனர் சதீஷ் கெளசிக் திடீர் மரணம்
இதைத் தொடர்ந்து பேசுகையில், வட சென்னை படத்தை மிஸ் பண்ணிட்டோமே என்கிற வருத்தத்தால் நான் அந்த படத்தை இதுவரை பார்க்கவே இல்லை. விடுதலை படத்திற்காக முதலில் 8 நாள் என்னிடம் கால்ஷீட் கேட்ட வெற்றிமாறன் கடம்பூர் அருகே ஒரு காட்டுப்பகுதியில் வைத்து ஷூட்டிங் நடத்தினார். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது 8 நாளும் எனக்கு ஆடிஷன் நடந்தது என்று.
வெற்றிமாறன் மிகவும் பொறுப்பான இயக்குனர். ஆடுகளம் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தபோது இங்கு ஆடியன்ஸாக உட்கார்ந்து இருந்த நான். இன்று அதே மேடையில் வெற்றிமாறனுடன் உட்கார்ந்து இருப்பது அவ்ளோ சந்தோஷமாக உள்ளது. தயவு செய்து இளையராஜா பேசும்போது யாரும் கத்தாதீர்கள் என வேண்டுகோள் விடுத்து தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார் விஜய் சேதுபதி.
இதையும் படியுங்கள்... சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மனைவியை 2-வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் - காரணம் என்ன?