- Home
- Cinema
- சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மனைவியை 2-வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் - காரணம் என்ன?
சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மனைவியை 2-வது முறையாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகர் - காரணம் என்ன?
பிரபலமான நடிகரும், வழக்கறிஞருமான ஷுகூர், கண்ணூர் பல்கலை சட்டத்துறை தலைவர் ஷீனாவை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

‘நா தான் கேஸ் கொடு’ எனகிற மலையாள படத்தின் மூலம் பிரபலமான நடிகரும், வழக்கறிஞருமான ஷுகூர், கண்ணூர் பல்கலை சட்டத்துறை தலைவர் ஷீனாவை 2வது முறையாக திருமணம் செய்து கொண்டனர். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஷுகூருக்கும் ஷீனாவுக்கும் கடந்த 1994-ம் ஆண்டே முதலில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவரும் தற்போது சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் மீண்டும் திருமணம் செய்துகொண்டதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. முஸ்லிம்களின் வாரிசு உரிமைச் சட்டத்தின்படி மகன்கள் இருந்தால் முழுச் சொத்தையும் மாற்றலாம். ஷுகூருக்கும் ஷீனாவுக்கும் மூன்றுமே பெண் குழந்தைகள் என்பதால், அவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சொத்து மட்டுமே சேரும். மீதமுள்ளதை சகோதரர்களுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும்.
இதையும் படியுங்கள்... காம வெறியர்களை கேட்கவில்லை... மகளிர் தின வாழ்த்து சொன்ன வைரமுத்துவை கவிதை நடையில் விளாசிய சின்மயி
ஆனால் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் மறுமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் தனது சொத்துக்களின் உரிமை தனது மகள்களுக்கு முழுமையாக சென்று சேரும் என்பதை கருத்தில் கொண்டுதான் தனது மனைவி ஷீனாவை இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டதாக நடிகர் ஷுகூர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தன்று இவர்கள் ஷுகூரும், ஷீனாவும் 2-வது முறையாக திருமணம் செய்துகொண்டனர். மகள்களை சாட்சியாக வைத்து பதிவாளர் மூலம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இரண்டு கார் விபத்துக்களில் சிக்க நேரிட்டதாகவும், அதன்பின்னரே தனது மகள்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் நடிகர் ஷுகூர் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... சார்பட்டா 2-வுக்கு போட்டியாக... ‘வட சென்னை 2’ படத்தின் மாஸான அப்டேட்டை வெளியிட்ட வெற்றிமாறன் - எப்போ ஆரம்பம்?