Immortal Movie Day 1 Box Office : இம்மார்டல் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?
Immortal Day 1 Box Office : மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாகவும், கயாடு லோஹர் ஹீரோயினாகவும் நடித்துள்ள இம்மார்டல் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Immortal Movie Box Office
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு மர்ம சம்பவத்துடன் தொடங்கி, இன்றைய காலகட்டத்திற்கு நகரும் வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவரும் ஹாரர் த்ரில்லராக இந்த படம் உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கயாடு லோஹர் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படம், திரையரங்குகளில் வெளியாகி பாசிடிவ் ரெஸ்பான்ஸ் பெற்று வருகிறது.
இம்மார்டல் கதை என்ன?
கதையின் தொடக்கத்தில், நிறைமாத கர்ப்பிணியான பெண் ஒருவர் விசித்திரமான குழந்தையைப் பெற்றெடுக்கிறார். அந்தக் குழந்தை சாதாரணமானது அல்ல என்று அங்கிருந்த மூதாட்டி எச்சரிக்க, பயந்துபோன குடும்பத்தினர் குழந்தையை மலை உச்சியில் விட்டுச் செல்கிறார்கள். இதற்குப் பிறகு கதை நேரடியாக 2026-ஆம் ஆண்டுக்குச் செல்கிறது. சென்னையில் தனது மாமாவின் பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்யும் இளைஞனாக ஜி.வி. பிரகாஷ் குமார் அறிமுகமாகிறார். குறைந்த வாடகையில் தங்க இடம் தேடி அலையும் அவருக்கு, ஒரு இளம் பெண்ணிடம் இருந்து எதிர்பாராத அழைப்பு வருகிறது. தான் வசிக்கும் பெரிய பங்களா வீட்டில் பகிர்ந்து தங்க வருமாறு அவர் அழைக்கிறார்.
குறைந்த செலவில் வசதியான வீடு கிடைத்த மகிழ்ச்சியில் நாயகன் அந்த வீட்டில் குடியேறுகிறார். காலப்போக்கில் இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கிறது. ஆனால், அந்தப் பெண் சாதாரண மனிதர் அல்ல என்பதும், அந்த வீட்டைச் சுற்றி மர்மமான அமானுஷ்ய சக்திகள் இருப்பதும் நாயகனுக்கு தெரியவருகிறது. வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகனுக்கு பல அதிர்ச்சி சம்பவங்கள் காத்திருக்கின்றன. இதன்பிறகு நடக்கும் திகில் நிறைந்த திருப்பங்களே படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளன.
இம்மார்டல் படம் எப்படி இருக்கு?
ஜி.வி. பிரகாஷ் குமார், இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். நாயகியாக நடித்துள்ள கயாடு லோஹர், அழகும் நடிப்பும் கலந்த தோற்றத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அவரது சிரிப்பும், வசன உச்சரிப்பும் தனித்துவமான அனுபவத்தை அளிக்கின்றன. படத்தின் பாடல்கள் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. திகில் காட்சிகளுக்கு ஏற்ற ஒளிப்பதிவும், பின்னணி இசையும் கதையின் பதட்டத்தை அதிகரிக்கின்றன. எம். ராஜேஷின் படத்தொகுப்பில் 131 நிமிடங்கள் ஓடும் இந்த படம், விறுவிறுப்பை குறையாமல் கொண்டு செல்கிறது.
இம்மார்டல் படத்தின் வசூல்
இம்மார்டல் படத்திற்கு பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால், அது வசூலிலும் பிரதிபலித்துள்ளது. அதன்படி இப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே இந்தியாவில் மட்டும் ரூ.1.10 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளது. வித்தியாசமான கதையம்சத்துடன் வந்துள்ளதால் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், இம்மார்டல் படத்தின் வசூல் மேலும் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இப்படம் ஜிவி பிரகாஷுக்கு ஒரு தரமான கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

