MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • TMS-ஐ விட SPB சூப்பர்... ஜாம்பவான் குரலை தூக்கியெறிந்து இளையராஜா தந்த சூப்பர் ஹிட் பாடல்..!

TMS-ஐ விட SPB சூப்பர்... ஜாம்பவான் குரலை தூக்கியெறிந்து இளையராஜா தந்த சூப்பர் ஹிட் பாடல்..!

இசைஞானி இளையராஜா இசையில் டி.எம்.செளந்திரராஜன் பாடிய பாடல் அவருக்கு திருப்தி அளிக்காததால், அவருக்கு பதில் எஸ்பிபியை பாட வைத்து அதை படத்தில் சேர்த்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 25 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja Rejected TMS and Chose SPB
Image Credit : X

Ilaiyaraaja Rejected TMS and Chose SPB

தமிழ் திரையிசை உலகில் தன்னிகரற்ற குரலுக்கு அதிபதியாக இருந்து வந்தவர் தான் டி.எம்.சௌந்திரராஜன். எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜி போன்ற திரை மேதைகளுக்கு தமது குரலால் உயிரூட்டிய பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. ஆனால் இந்த தெய்வீக குரலே ஒரு சூழலில் திரும்ப அனுப்பப்பட்டது என்றால் நம்புவீர்களா? ஆனால் அது தான் நிஜம். ஒரு முறை இளையராஜா இசையில் பாட வந்த டி.எம்.செளந்திரராஜன், ரெக்கார்ட் செய்த பாடல் படத்தில் இடம்பெறாமல் போன கதையைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அது எந்த பாடல்?
Image Credit : Asianet News

அது எந்த பாடல்?

1979-ல் வெளியான "நான் வாழவைப்பேன்" படத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இன்றும் ரசிகர்கள் மனதில் கேள்விக்குறியாக நிற்கிறது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கே.ஆர்.விஜயா நடித்த "நான் வாழவைப்பேன்" படத்தை யோகானந்த் இயக்கி இருந்தார், நோயுற்ற கணவன் தன் மனைவியின் பிறந்தநாளில் ஏக்கத்தோடும் அன்போடும் பாடுவதாக அமைந்த காட்சிக்காக வாலி லிரிக்ஸ் எழுதிய "என்னோடு பாடுங்கள், நல்வாழ்த்து பாடுங்கள்" என்ற பாடல் இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது.

Related Articles

Related image1
இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - ராஜாவின் குரலில் மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!
Related image2
பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?
34
டி.எம்.எஸ் குரலில் திருப்தி இல்லை
Image Credit : google

டி.எம்.எஸ் குரலில் திருப்தி இல்லை

முதல் கட்டத்தில் இந்தப் பாடலை டி.எம்.எஸ். அவர்களே பாடி ஒலிப்பதிவு செய்தார். அவரது குரல் வழக்கம்போல் கம்பீரமாகவும் ஆழமாகவும் ஒலித்தது. ஆனால் அதை கேட்ட இளையராஜா அந்தப் பாடல் தாம் எதிர்பார்த்த உணர்வை வெளிப்படுத்தவில்லை என்று கூறி அதை நிராகரித்தார். பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அதே பாடலை மென்மையான தொனியில் பாட வைத்த இளையராஜா, தான் எதிர்பார்த்தது இது தான் எனக்கூறி, டி.எம்.எஸ் பாடிய வெர்ஷனை தூக்கிப்போட்டுவிட்டு, எஸ்பிபி பாடிய அந்த வெர்ஷனை படத்தில் வைத்தார்.

44
ஒப்பிட்டு பார்த்த இளையராஜா
Image Credit : AFP

ஒப்பிட்டு பார்த்த இளையராஜா

இரண்டு குரல்களையும் ஒப்பிட்டால், டி.எம்.எஸ். குரலில் ஒரு தடிமனான அதிர்வும் எஸ்.பி.பி. குரலில் இனிய மென்மையும் உணரலாம். படத்தின் காட்சியமைப்புக்கு இளையராஜா எஸ்.பி.பி.யின் குரலை பொருத்தமானதாக கருதினாராம். இருப்பினும் இந்த முடிவு அன்றும் சரி, இன்றும் சரி, விவாதங்களை கிளறிக்கொண்டே இருக்கிறது. டி.எம்.எஸ்-ஐ வேண்டுமென்றே ஒதுக்கினார்களா அல்லது தொழில்நுட்ப ரீதியான இசை அழகுணர்வு மட்டுமே காரணமா என்ற கேள்விக்கு இன்றுவரை தெளிவான பதில் இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Related Stories
Recommended image1
இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - ராஜாவின் குரலில் மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!
Recommended image2
பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved