MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?

பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?

பாக்கியராஜ் படத்துக்காக இசையமைக்கப்பட்ட இரண்டு பாடல்களை ரஜினிகாந்த் படத்துக்கு இசைஞானி இளையராஜா கைமாற்றி இருக்கிறார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 21 2026, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bhagyaraj Movie songs Used in Rajinikanth Film
Image Credit : X

Bhagyaraj Movie songs Used in Rajinikanth Film

இயக்குநர் பாக்கியராஜ் தான் இயக்கிய ராசுக்குட்டி படத்தின் கம்போசிங்கிற்காக இளையராஜாவை பொள்ளாச்சிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அப்போது பொள்ளாச்சியில் உள்ள ஒரு தோட்டத்தில் அமர்ந்து அந்த படத்திற்கான பாடல் கம்போசிங்கில் ஈடுபட்டிருக்கிறார் இளையராஜா. அப்போது பாக்கியராஜ் கேட்ட பாடல்களைக் காட்டிலும் கூடுதலாக இரண்டு மெட்டுக்களையும் கம்போஸ் பண்ணினாராம் இளையராஜா. அந்த இரண்டு மெட்டுக்களுமே பாக்கியராஜுக்கு பிடித்துப்போக, அதை ராசுக்குட்டி படத்தில் வைக்க முடியாததால், தன்னுடைய அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார்.

24
கைமாறிய பாக்கியராஜ் பாடல்கள்
Image Credit : Ilaiyaraaja/ Facebook

கைமாறிய பாக்கியராஜ் பாடல்கள்

இளையராஜாவும் அவரிடம் ஓகே சொல்லி இருக்கிறார். அந்த ரெண்டு பாடல் தான் பின்னாளில் ‘ஒரு நாளும் உனை மறவாத’ மற்றும் ‘நிலவே முகம் காட்டு’ ஆகிய பாடல்களாக திரையில் வந்தது. என்னடா இது பாக்கியராஜுக்கு போட்ட பாடல், ரஜினி படத்தில் இருக்கிறது என்று தானே யோசிக்கிறீங்க, அங்கு தான் இளையராஜா ஒரு வேளையை பார்த்திருக்கிறார். ஒருநாள் பாக்கியராஜ், ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு செல்கையில், அங்கு ஒரு அறையில் ஒரு நாளும் உனை மறவாத பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததாம். இது நம்ம பாட்டாச்சே என பாக்கியராஜ் ஷாக் ஆகிப் போனாராம்.

Related Articles

Related image1
Now Playing
"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
Related image2
Now Playing
AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
34
பாக்கியராஜின் பெரியமனசு
Image Credit : Asianet News

பாக்கியராஜின் பெரியமனசு

நமக்காக போடப்பட்ட பாடல் எப்படி இங்க வந்துச்சு என பதற்றத்தோடு உள்ளே சென்று பார்த்திருக்கிறார் பாக்கியராஜ். அங்கு ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த எஜமான் படத்திற்கான பாடல் பதிவு விறுவிறுப்பாக நடந்து வந்ததாம். இதைப்பார்த்த பாக்கியராஜ், ஆர்வி உதயகுமாரிடம் சென்று இது என்னோட படத்துக்கு போட்ட பாடலாச்சே நீங்க எப்படி பதிவு பண்றீங்க என கேட்க, அவரும் மழுப்பலாக ஒரு பதிலை சொல்லி இருக்கிறார். பின்னர் தான் தன்னோட படத்துக்காக போட்ட பாடலை இளையராஜா, எஜமான் படத்துக்கு கொடுத்திருக்கிறார் என்பதை உணந்திருக்கிறார் பாக்கியராஜ்.

44
பாக்கியராஜ் இசையமைத்த படங்கள்
Image Credit : Google

பாக்கியராஜ் இசையமைத்த படங்கள்

தனக்காக உருவாக்கப்பட்ட பாடல்கள் வேறு ஒரு படத்துக்காக போயிருந்தாலும், இளையராஜா மீதும், அவரின் இசை மீதும் உள்ள மதிப்பால், அதனை பெரிதுபடுத்தாமல் பெரிய மனதோடு விட்டுவிட்டார். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தை பாக்கியராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருந்தார். பின்னாளில் பாக்கியராஜே இசையமைப்பாளராக மாறி தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து வந்தார். இது நம்ம ஆளு, ஆராரோ ஆரிராரோ, பொண்ணு பாக்க போறேன், பவுனு பவுனுதான், ஞானப்பழம் போன்ற படங்கள் பாக்கியராஜ் இசையமைப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
தமிழ்ப் பாடல்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
நான் ஸ்டாப் வசூல் வேட்டை... 2 நாட்களில் யூத் படம் வாரிசுருட்டியது இத்தனை கோடியா?
Recommended image2
என்கிட்ட பிரியாணி கேட்காதீங்க... வைரலாகும் மணிமேகலையின் ரம்ஜான் செலிபிரேஷன் போஸ்ட்
Recommended image3
தாலியை தொலைத்த சீதா... தடபுடலாக கொண்டாடப்படும் அண்ணாமலை பர்த்டே - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Related Stories
Recommended image1
Now Playing
"நோ" சொன்ன ரஜினிக்கு இளையராஜா சொன்ன அந்த 'ஒரு' ஜோசியம்! சூப்பர் ஹிட்டு பாட்டு எது தெரியுமா?!
Recommended image2
Now Playing
AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved