MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - ராஜாவின் குரலில் மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!

இளையராஜா கெஞ்சி கேட்டும் பாட மறுத்த யேசுதாஸ் - ராஜாவின் குரலில் மாஸ்டர் பீஸ் பாடல் உருவான கதை...!

இசைஞானி இளையராஜா இசையில் ஒரு பாடல் பாட யேசுதாஸுக்கு அழைப்பு வந்திருக்கிறது. அப்பாடல் கம்போசிங்கிற்கு லேட்டாக போன யேசுதாஸ், அதை பாட மறுத்து திரும்பிய சம்பவத்தை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 24 2026, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ilaiyaraaja vs yesudas: The Studio Moment That Shocked Tamil Music World
Image Credit : X

Ilaiyaraaja vs yesudas: The Studio Moment That Shocked Tamil Music World

தமிழ் திரையிசை உலகில் சில பாடல்கள் வெறும் இசை மட்டுமல்ல, அவை உயிரோட்டத்துடன் இருப்பதோடு, கேட்பவர்களின் உணர்வுகளோடு ஒன்றி விடும். அப்படிப்பட்ட ஒரு பாடல் உருவான கதை தான் இது. இளையராஜாவின் ஸ்டுடியோவில் அன்று எல்லாம் தயாராக இருந்தது. இசைக் கலைஞர்கள் தங்கள் இடங்களில் அமர்ந்திருந்தனர். காத்திருந்தது ஒரே ஒரு குரலுக்காக மட்டுமே. அந்தக் குரல் வேறுயாருமில்லை கே.ஜே.யேசுதாஸுடையது தான். நேரம் கடந்தது. யேசுதாஸ் வரவில்லை.

24
நேரத்தை வீணடிக்காத இளையராஜா
Image Credit : Social Media

நேரத்தை வீணடிக்காத இளையராஜா

"வீணாக நேரம் போகிறது, ஒரு ட்ரையல் பார்ப்போம்" என்று முடிவெடுத்த இளையராஜா, தானே அந்த பாடலை பாடி ஒலிப்பதிவு செய்தார். பிறகு வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு. தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போனதற்கு வருந்தினார் யேசுதாஸ். மறுநாள் ஸ்டுடியோவுக்கு வந்த யேசுதாஸிடம், இளையராஜா தான் முன்தினம் பாடிய ட்ரையல் பதிவை கொடுத்தார். "ஒரு முறை கேட்டுவிட்டு தயாராகுங்கள்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

Related Articles

Related image1
ராமராஜன் நடிக்க மறுத்த படம்; தப்பு கணக்கு போட்ட இளையராஜா... தலைகீழாய் மாறிய ராஜ்கிரண் வாழ்க்கை..!
Related image2
பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?
34
பாடலைக் கேட்டு கண்ணீர்விட்ட யேசுதாஸ்
Image Credit : KJ Yesudas/ Facebook

பாடலைக் கேட்டு கண்ணீர்விட்ட யேசுதாஸ்

பாடலை முழுமையாகக் கேட்ட யேசுதாஸின் கண்கள் கண்ணீரால் நிரம்பிவிட்டன. அவர் நேரடியாக இளையராஜாவிடம் சென்று சொன்னார், "இந்தப் பாடலை என்னால் பாட மனசு வரவில்லை. இந்த உணர்வை, இந்த ஆழத்தை என்னால் தர முடியுமா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் மக்கள் மனதில் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்றால், அது உங்கள் குரலில் மட்டுமே சாத்தியம்" என சொல்லி இருக்கிறார். ஆனால் இளையராஜா அவருடைய வெர்ஷனை ரெக்கார்டு செய்துவிடலாம் என காத்திருக்க, அவர் எவ்வளவு வற்புறுத்தியும் யேசுதாஸ் இணங்கவில்லை.

44
பாட மறுத்த யேசுதாஸ்
Image Credit : our own

பாட மறுத்த யேசுதாஸ்

இப்படி ஒரு தலைசிறந்த பாடகராக இருந்தும், ஒரு பாடல் சரியான குரலில் வாழ வேண்டும் என்பதற்காக, யேசுதாஸ் தனக்கு வந்த வாய்ப்பை ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார். அன்று இளையராஜாவின் குரலில் உலகிற்கு வந்த அந்த பாடல் தான்... "ஜனனி ஜனனி ஜகம் நீ, அகம் நீ” பாடல். அந்த பாடல் கடந்த 1982ம் ஆண்டு வெளிவந்த தாய் மூகாம்பிகை என்கிற படத்தில் இடம்பெற்று இருந்தது. அப்பாடலை இன்று கண்ணை மூடி கேட்டால் கூட உங்களின் கண்களில் கண்ணீர் வரும். அந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக அப்பாடலை திறம்பட பாடி இருப்பார் இளையராஜா. அதனால் தான் அது மாஸ்டர் பீஸ் பாடலாக திகழ்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இளையராஜா
Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT-யில் உள்ள தரமான டாப் 10 தமிழ் த்ரில்லர் மூவீஸ் - ஒவ்வொன்னும் வேற லெவல்ல இருக்கும் பாஸ்..!
Recommended image2
ஆலிவரின் மாஸ்டர் மைண்ட் யார்? மதிவதினியால் மாட்டப்போகும் பெரும்புள்ளி - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image3
துரந்தர் 2 படம் பார்த்து ரஜினிகாந்த் போட்ட ரிவ்யூ... மெர்சலான இயக்குநர் ஆதித்யா தர்..!
Related Stories
Recommended image1
ராமராஜன் நடிக்க மறுத்த படம்; தப்பு கணக்கு போட்ட இளையராஜா... தலைகீழாய் மாறிய ராஜ்கிரண் வாழ்க்கை..!
Recommended image2
பாக்யராஜுக்கு போட்ட பாட்டை ரஜினி படத்துக்கு பார்சல் பண்ணிய இளையராஜா... அடடே இந்த ஹிட் பாடலா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved