- Home
- Cinema
- தேசிய பாதுகாப்பிற்காக தனது ஒரு மாத சம்பளம், இசை நிகழ்ச்சி மூலம் வரும் கட்டணத்தை வழங்கும் இளையராஜா!
தேசிய பாதுகாப்பிற்காக தனது ஒரு மாத சம்பளம், இசை நிகழ்ச்சி மூலம் வரும் கட்டணத்தை வழங்கும் இளையராஜா!
Ilaiyaraaja Donates One Month Salary to National Defence Fund : இசைஞானி இளையராஜா தன்னுடைய ஒரு மாத சம்பளம் மற்றும் இசை நிகழ்ச்சியின் மூலம் வரும் வருமானத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்காக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இளையராஜாவின் ஒரு மாத சம்பளம்
Ilaiyaraaja Donates One Month Salary to National Defence Fund : கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலா பயண்களை குறி வைத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இந்திய இராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது போர் தொடர்ந்தது. இதன் காரணமாக இருநாட்டு எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இளையராஜா இசை நிகழ்ச்சி கட்டணம்
ஏற்கனவே பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தையை தொடங்கி இந்தியா உடன் சமரசம் செய்து கொள்வதாக கூறியிருந்த நிலையில் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தி போரில் வெற்றியும் கண்டது. இந்த நிலையில் தான் இசைஞானி இளையராஜா தேசிய பாதுகாபிற்காக ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பிற்காக நிதி கொடுக்கும் இளையராஜா
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: பஹல்காமில் சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நம் இராணுவ வீரர்கள் துணிச்சலோடு செயல்படுவார்கள் என்பதை முன் கூட்டியே அறியாமலே லண்டனில் நான் இசையமைத்த எனது முதல் சிம்பொனிக்கு வேலியண்ட் (தைரியம் மற்றும் துணிச்சல்) என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
இளையராஜாவின் முதல் சிம்பொனி வேலியண்ட்
தைரியம் மற்றும் துணிச்சலோடு செயல்பட்டு நம் இராணுவ வீரர்கள் பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகளை வீழ்த்துவார்கள் என்று நம்பிக்கை தனக்கு இருக்கிறது. ஒரு இந்தியனாக, நாடாளுமன்ற உறுப்பினராக நம் நாட்டு எல்லைகளையும், நாட்டு மக்களைஉயும் பாதுகாக்கும் நம் ஹீரோக்களின் துணிச்சல் மற்றும் தைரியத்தின் முதல் முயற்சிக்காக இசை நிகழ்ச்சியின் மூலமாக வரும் கட்டணம் மற்றும் என்னுடைய ஒரு மாத சம்பளத்தை நான் தேசிய பாதுகாப்பு நிதிக்காக வழங்க முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.