MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Theatre & OTT Releases : இதயம் முரளி முதல் பல்டி வரை... ஜூலை 10ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

Theatre & OTT Releases : இதயம் முரளி முதல் பல்டி வரை... ஜூலை 10ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

Theatre and OTT Releases : இந்த வாரம் தியேட்டரைவிட ஓடிடியில் தான் அதிகப்படியான படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
This Week Theatre Release Movies
Image Credit : X

This Week Theatre Release Movies

ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரமான வருகிற ஜூலை 10ந் தேதி தமிழில் குறிப்பிடத்தக்க வெளியீடு என்றால் அது அதர்வா நடித்த இதயம் முரளி படம் தான். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தான் தயாரித்து, இயக்கி உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தில் அதர்வா உடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், டிராவிட், சுதாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளதோடு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் இப்படத்தின் மூலம் நடிகராகவும் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் ஜூலை 10ந் தேதி திரைக்கு வருகிறது.

இதுதவிர, வெங்கட் ரமணன் இயக்கிய முதற்கனல், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான லவ்வோ லவ், ஹரீஷ் இயக்கி உள்ள பாய்ஸ் நெவர் காம்பிரமைஸ் போன்ற படங்களும் திரைக்கு வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
This Week OTT Release
Image Credit : Facebook

This Week OTT Release

சினிமா ரசிகர்களுக்கு ஓடிடி தளங்களில் மீண்டும் ஒரு கொண்டாட்டம் காத்திருக்கிறது. ஜூலை 8 முதல் 12 வரை, நெட்ஃப்ளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, சோனிலிவ், ஜீ5 போன்ற முக்கிய தளங்களில் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ராம் சரண் நடித்த 'பெட்டி' படமும் இந்த வாரம் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கிற்கு வருகிறது.

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள 'பெட்டி' திரைப்படம் ஜூலை 9 முதல் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்தி பதிப்பு பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுஷ்மான் குரானா, சாரா அலி கான், வாமிகா கபி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்துள்ள 'பதி பத்னி அவுர் வோ தோ' திரைப்படம் ஜூலை 10 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்தப் படம் குடும்ப பார்வையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதே நாளில் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகும் 'இக்கா' திரைப்படத்தில் அக்ஷய் கண்ணா மற்றும் சன்னி தியோல் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீதிமன்றத்தை மையமாகக் கொண்ட இந்த கோர்ட்ரூம் டிராமாவில், பரபரப்பான விசாரணை காட்சிகளும் எதிர்பாராத திருப்பங்களும் முக்கிய அம்சங்களாக இருக்கும்.

Related Articles

Related image1
ஒரு ரீசார்ஜில் 15 ஓடிடி, 1000 டிவி சேனல்கள்.. ரூ.200 போதும்.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு
Related image2
Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
35
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
Image Credit : Asianet News

இந்த வார ஓடிடி வெளியீடுகள்

இந்திய கால்பந்தின் வளர்ச்சியையும், குறிப்பாக கேரளாவில் அந்த விளையாட்டுக்கு இருக்கும் தனித்துவமான ரசிகர் ஆதரவையும் பதிவு செய்யும் 'Land Of Football' டாக்குமெண்டரி சீரிஸ் ஜூலை 10 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

வரலாற்று பின்னணியை விரும்பும் ரசிகர்களுக்காக 'Little House On The Prairie' வெப் சீரிஸ் ஜூலை 9 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. 19-ஆம் நூற்றாண்டின் அமெரிக்க விவசாயக் குடும்ப வாழ்க்கையை உணர்வுபூர்வமாக பதிவு செய்யும் இந்த சீரிஸ், குடும்ப உறவுகளையும் அந்தக் கால வாழ்க்கை முறையையும் வெளிப்படுத்துகிறது.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படங்களை விரும்புபவர்களுக்காக 'Shipwrecked: Nightmare At Sea' ஜூலை 10 அன்று நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. 2012-ஆம் ஆண்டு உலகையே அதிரவைத்த Costa Concordia சொகுசுக் கப்பல் விபத்தை இந்த டாக்குமெண்டரி விரிவாக பதிவு செய்கிறது.

ஜப்பானிய டிராமா ரசிகர்களுக்காக 'Until The T-Shirt Dries' ஜூலை 10 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாக உள்ளது. ஒரு விபத்துக்குப் பிறகு தம்பதியரின் உறவில் ஏற்படும் மாற்றங்களையும், அவர்களின் உணர்ச்சி போராட்டங்களையும் இந்த சீரிஸ் பேசுகிறது.

45
ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?
Image Credit : Facebook

ஓடிடியில் என்ன ஸ்பெஷல்?

தமிழில் ஜெயராம் நடித்துள்ள 'பரிமள & கோ' திரைப்படம் ஜூலை 10 முதல் ஜீ5-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. குடும்ப உறவுகள், நகைச்சுவை, சஸ்பென்ஸ் மற்றும் டார்க் காமெடி அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பானிஷ் காமெடி டிராமாவான 'Susana And Elvira: No Plan B' ஜூலை 12 முதல் நெட்ஃபிளிக்ஸ்-ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஒரு திருமண நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயலும் இரு தோழிகள் சந்திக்கும் எதிர்பாராத பிரச்சனைகளே கதையின் மையமாக அமைகிறது.

த்ரில்லர் ரசிகர்களுக்காக 'The Apartment Job' ஜூலை 11 அன்று நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. பெரிய கொள்ளைத் திட்டம் ஒன்றைச் சுற்றி நகரும் இந்தக் கதையில், மறைந்திருந்த ஊழல் ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் விதம் சஸ்பென்ஸை அதிகரிக்கிறது.

55
ஓடிடி ரிலீஸ் என்னென்ன?
Image Credit : Facebook

ஓடிடி ரிலீஸ் என்னென்ன?

ஷேன் நிகம் நடித்துள்ள மலையாள திரைப்படமான 'பல்டி' ஜூலை 10 முதல் சோனி லிவ் ஓடிடி-ல் வெளியாகிறது. கேரளா-தமிழ்நாடு எல்லைப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, விளையாட்டு, குற்றம் மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்களை இணைத்து இந்த ஆக்‌ஷன் டிராமா உருவாகியுள்ளது.

பிரைம் வீடியோ-வில் ஜூலை 8 முதல் 'Trying' வெப் சீரிஸின் ஐந்தாவது சீசன் வெளியாகிறது. தத்தெடுப்பு பயணத்தில் இருக்கும் நிக்கி மற்றும் ஜேசன் வாழ்க்கையில் புதிய நபரின் வருகை ஏற்படுத்தும் மாற்றங்களே இந்த சீசனின் முக்கியக் கதைக்களமாக இருக்கும்.

அதேபோல், 1980-களின் நியூயார்க் நகரில் செயல்பட்ட ஐரிஷ் கேங் பின்னணியில் உருவாகியுள்ள க்ரைம் டிராமா சீரிஸான 'The Westies' ஜூலை 12 முதல் பிரைம் வீடியோ-வில் வெளியாகிறது. குற்ற உலகின் பின்னணியை மையமாகக் கொண்ட இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையுடன் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Recommended image2
ஏன் ஜெயிலர் 2 முதல் பாகத்தை விட பெஸ்ட்? முத்துவேல் பாண்டியனின் விஸ்வரூபமும், இறங்கி அடிக்கும் நெல்சனும்!
Recommended image3
Siragadikka Aasai : மீனா குடும்பத்துக்கு சாபம் விடும் சிந்தாமணி.... ஜீவா சொன்ன மேட்டரால் பீதியடைந்த மனோஜ்...!
Related Stories
Recommended image1
ஒரு ரீசார்ஜில் 15 ஓடிடி, 1000 டிவி சேனல்கள்.. ரூ.200 போதும்.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு
Recommended image2
Peddi OTT Release: 'பெத்தி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த தளத்தில் வெளியாகிறது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved