இந்த ஹிட் படத்தில் கார்த்திக்கு முன் நடிக்க வேண்டியது நான் தான்! 13 வருடத்திற்கு பின் விஷ்ணு விஷால் பீலிங்!
இந்த படத்தில், நடிக்க வேண்டியது நான் தான்... கார்த்தியின் சூப்பர் ஹிட் படத்தை நினைத்து 13 வருடத்திற்கு பிறகும் பீல் செய்து விஷ்ணு விஷால் போட்ட பதிவு வைரலாகி வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால், கார்த்தி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படத்தில், முதலில் நடிக்க வேண்டியது நான் தான், ஆனால் விதியின் திட்டத்தால் இந்த படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை என ஆதங்கத்தோடு போட்ட பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
திரையுலகில் அறிமுகமாகும் நடிகர்களுக்கு, முதல் படமே வெற்றி படமாக அமைவது என்பது அவர்களின் நடிப்பை தாண்டி அதிஷ்டமும் கை கொடுத்தால் தான் நடக்கும். அப்படி தன்னுடைய முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றவர் விஷ்ணு விஷால்.
இந்த படத்தை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான குள்ளநரி கூட்டம், நீர் பறவை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், போன்ற படங்கள் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. நடிகராக மட்டுமின்றி தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகில் நிலை நிறுத்திக் கொண்டுள்ள விஷ்ணு விஷால், தன்னுடைய கையில் இருந்து நழுவிய சூப்பர் ஹிட் படம் குறித்து ட்விட்டரில் போட்டுள்ள பீலிங் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆண்டுகளுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'நான் மகான் அல்ல. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் ஜெயப்பிரகாஷ், சூரி, பிரியா அட்லி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
ரம்யா பாண்டியன் ஓரமா போங்க... சுருட்டை முடி அழகி சுழலினியின் சேலை கவர்ச்சியால் சூடான ரசிகர்கள்!
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் குறித்து விஷ்ணு விஷால் தன்னுடைய twitter பக்கத்தில் போட்டுள்ள பதிவில்... "நான் மகான் அல்ல படம் எனக்கு வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பின்னர், சுசீந்திரன் இயக்கத்தில் நான் நடிக்க வேண்டிய இரண்டாவது படமாக இருந்திருக்க வேண்டும். இந்த படத்தில் தான் எல்லாமே இறுதி செய்ய பட்டுவிட்டது. ஆனால் விதி வேறு ஒரு திட்டம் போட்டு இருந்தது.
சில சமயம் இந்த படம் தன்னுடைய இரண்டாவது படமாக அமைந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்ப்பேன்" என இப்படம் வெளியாகி 13 வருடம் ஆன பின்னரும் ஃபீல் செய்து வருத்தத்தோடு பதிவிட்டுள்ளார்". தற்போது விஷ்ணு விஷால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள், ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஆர்யன் என்கிற படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.