MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இஸ்லாமிய சிறுவன் பாடியதை கேட்டு திகைத்து போன டி.எம்.எஸ்.! உள்ளம் உருகுதய்யா பாடல் பிறந்த கதை..

இஸ்லாமிய சிறுவன் பாடியதை கேட்டு திகைத்து போன டி.எம்.எஸ்.! உள்ளம் உருகுதய்யா பாடல் பிறந்த கதை..

டி.எம்.எஸ் பாடிய உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு பின்னால் சுவாரஸ்ய கதை உள்ளது என்பது பலருக்கும் தெரியாது.

2 Min read
Author : Ramya s
Published : Jan 17 2024, 04:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்களில் டி.எம்.சௌந்தரராஜனும் ஒருவர். டிஎம்எஸ் என்று அழைக்கப்படும் அவர் 10,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். கலா ரத்னம், சிங்க குரலோன், கானக் குரலோன், இசை சக்ரவர்த்தி என பல புகழ்மொழிக்கும் சொந்தக்காரர் தான் டி.எம்.ஸ். தமிழ் திரையுலகின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் பின்னணி பாடல்கள் பாடிய சில பாடகர்களில் டிஎம். சௌந்தரராஜனும் ஒருவர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

டி.எம்.சௌந்தரராஜனின் குரலமிகவும் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர். தனது எல்லா படங்களுக்கும் அவரே பாடல்களை பாட வேண்டும் என்று வலியுறுத்தினார். திரைப்படங்களில் பாடுவதைத் தவிர, அவர் ஒரு கர்நாடக இசைக்கலைஞராகவும் இருந்தார். மேலும் 250-க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை அவர் பாடி உள்ளார். குறிப்பாக அழகென்ற சொல்லுக்கு முருகா, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா என இவரின் பாடல்கள் அனைத்தும் கேட்போரின் மனதை உருக வைக்கும்.

35

உள்ளம் உருகுதய்யா பாடலுக்கு பின்னால் சுவாரஸ்ய கதை உள்ளது. ஆம். இந்த பாடல் வெளியாகி பல ஆண்டுகள் வரை கூட டி.எம்.சௌந்தரராஜனுக்கு இந்தப் பாடலை எழுதிப் பாடியது யார் என்று தெரியாதாம். ஒரு முறை பழநிக்கு சென்ற டிஎம்எஸ் அங்கு ஒரு லாட்ஜில் தங்கிருந்த போது, சிறுவன் ஒருவன் இந்த பாடலை பாடிக்கொண்டிருந்தானாம்

அந்த பாடலை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தாராம் டி.எம்.எஸ். அவருக்கு இன்னொரு ஆச்சர்யமும் காத்திருந்தது. அந்த பாடலை பாடியது இஸ்லாமிய சிறுவனாம். உடனடியாக அந்த சிறுவனை அழைத்த டி எம் எஸ் அந்த பாடல் வரிகள் குறித்தும் அந்த பாடலை எழுதியவர் யார் என்பது குறித்தும் கேட்டுள்ளார். ஆனால் அச்சிறுவன் யார் பாடியது என்றெல்லாம் தெரியாது, நான் கேட்டிருக்கேன், நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளான். பின்னர் டி.எம்.சௌந்தரராஜன் அந்தப் சிறுவனை முழுப் பாடலைப் பாட வைத்து அதனை வரி வரியாக குறித்துக்கொண்டாராம்.

45

பின்னர் பல மேடைகளில் அந்த பாடலை தானே இசையமைத்து பாடி உள்ளார் டி.எம்.எஸ். எனினும் அந்த பாடலை யார் எழுதியது என்று அவருக்கு தெரியவில்லை. சில நாட்கள் கழித்து டி.எம்.எஸ் சென்னை தம்புசெட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்ற போது அங்கிருந்த கல்வெட்டு ஒன்றி, உள்ளம் உருகுதய்யா முருகா என்ற பாடல் பொறிக்கப்பட்டிருப்பதைக் பார்த்துள்ளார். கீழே ஆண்டவன் பிச்சி என்ற அந்த பாடலை எழுதியவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

55

ஆண்டவன் பிச்சி என்பவர் ஒரு பெண், இவரின் இயற்பெயர் மரகதம். படிப்பறிவு இல்லாத அவர் தனது 10 வயது முதலே முருகனின் பாடியுள்ளார். அப்படி தான் உள்ளம் உருகுதய்யா பாடலை சென்னை காளிகாம்பாள் கோயிலில் பாடி உள்ளார். சென்னையில் பாடப்பட்ட இந்த பாடல் எப்படியோ பழனி வரை சென்றடைய அதை கேட்ட இஸ்லாமிய சிறுவன், அந்த பாடலை முனுமுணுத்துள்ளார். அச்சிறுவன் பாடியதை கேட்டு தான் டிஎம்எஸ் அந்த பாடலை பாடி உள்ளார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இந்த பாடல் முருகனின் உருக்காமான பாடல்களில் ஒன்றாக நிலைத்திருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Theatre and OTT Releases : சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆகும் ஜனநாயகன்... இந்த வார தியேட்டர் & ஓடிடி ரிலீஸ் ஒரு பார்வை
Recommended image2
Siragadikka Aasai : செம டோஸ் கொடுத்த விஜயா.... டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட்டாரா ரோகிணி?
Recommended image3
72nd National Film Awards: 2 தேசிய விருதுகளை தட்டி தூக்கிய தனுஷ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved