- Home
- Cinema
- இயக்கியது வெறும் 10 படங்கள் தான்; ஆனால் வசூல் 50 ஆயிரம் கோடி! யார் இந்த ஹாலிவுட் பாகுபலி?
இயக்கியது வெறும் 10 படங்கள் தான்; ஆனால் வசூல் 50 ஆயிரம் கோடி! யார் இந்த ஹாலிவுட் பாகுபலி?
ஹாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஒருவர் 46 ஆண்டுகளில் வெறும் 10 படங்களை மட்டுமே இயக்கி பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 ஆயிரம் கோடி வசூலை அள்ளி இருக்கிறார். அவரைப்பற்றி பார்க்கலாம்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
James Cameron
1997-ம் ஆண்டு டைட்டானிக் படம் வெளியானது. அதன் வசூல் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடிகளுக்கும் மேல். சிறந்த இயக்குனர் உள்பட 11 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது அப்படம். அந்த படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூனின் காலில் கோடிகளை கொட்ட தயாரிப்பாளர்களும் தயாராகிவிட்டனர். அப்போது தனது கனவு திரைப்படமான அவதாரை பற்றி கூறினார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் அவதார் படத்தில் இருக்கும் காட்சிகளை எடுக்கும் தொழில்நுட்பம் இன்னும் தயாரிக்கப்படவில்லை அதனால் அவதார் படத்தை ஓரம்கட்டிவைத்துவிட்டு வேறு ஒரு படத்தை இயக்குமாறு கூறியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Avatar
அதற்கு வயிற்றில் இருக்கும் குழந்தைகளை பெற்று எடுக்காமல், அடுத்த குழந்தைக்கு தயாராவது எப்படி என பதிலளித்திருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். அவரது கனவு நனவாக 12 ஆண்டுகள் ஆகின. 2009-ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் 18 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து அசத்தி இருந்தது. வேற்று கிரகம், ஏலியன்கள் என பல நூறு படங்கள் வந்திருந்தாலும், அதுவரை எந்த ஏலியனும் ரசிகர்களை ஈர்த்ததில்லை. ஆனால் ஜேம்ஸ் கேமரூன் உருவாக்கிய அவதார் கதாபாத்திரங்கள் கொண்டாடப்பட்டன.
இதையும் படியுங்கள்... ஹாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்? அதிக வசூல் அள்ளிய டாப் 5 பிரான்சைஸ் படங்கள்
James Cameron Movies
டைட்டானிக், அவதார் மட்டுமே ஜேம்ஸ் கேமரூனின் வெற்றிப்படங்கள் இல்லை. இன்று ஹாலிவுட் நாயகன் அர்னால்டு உலகெங்கும் பிரபலமாவதற்கு காரணம் டெர்மினேட்டர் திரைப்படம். அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தான். டைம் டிராவல், ஏஐ, மனித ரோபோ என 1980களிலேயே புதுமையான படங்களை எடுத்து அசத்தினார். கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக ஹாலிவுட்டில் வலம் வரும் ஜேம்ஸ் கேமரூன் இதுவரை வெறும் 10 படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார்.
James Cameron Movie Box Office
ஆனால் ஒவ்வொரு படமும் சினிமா உலகை வியந்து பார்க்க வைத்த பொக்கிஷம் ஆகும். இதுவரை ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய படங்கள் இயக்கிய 10 படங்கள் குவித்த வசூல் தொகை சுமார் 50 ஆயிரம் கோடிகளுக்கும் மேல். காலத்தை தாண்டி கற்பனையாலும் காட்சியமைப்பாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தார் ஜேம்ஸ் கேமரூன். அவதார் வெற்றிக்கு பின்னர் அடுத்தடுத்து 3 அவதார் படங்களை இயக்குவதாக அறிவித்தார் ஜேம்ஸ் கேமரூன். அதற்கான பணிகளை அவதார் 1ம் பாகம் வெளியான 2009-ம் ஆண்டே தொடங்கிவிட்டார்.
Secret Behind James Cameron Success
அவதார் படத்தின் இரண்டாம் பாகம் கடலுக்கு அடியில் நடக்கும் படி காட்சியமைக்கப்பட்டதால், அதனை தத்ரூபமாக எடுக்க விரும்பிய ஜேம்ஸ் கேமரூன், இதற்காக கடலுக்கு அடியே 11 கிலோ மீட்டர் சென்று பலரையும் மிரள வைத்தார். உலகின் வெகு சிலரே இதுபோன்ற பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். தரமான படங்களை எடுக்க ஜேம்ஸ் கேமரூன் எடுக்கும் மெனக்கெடல் தான், இதுநாள் வரை அவரது வெற்றியை உறுதி செய்தது. அந்த வகையில் அவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அவதார் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து. இவரின் சாதனைகளை எந்த இயக்குனராலும் இதுவரை முறியடிக்க முடியாததால் இன்றளவும் பாக்ஸ் ஆபிஸ் பாகுபலியாக திகழ்ந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... 97வது ஆஸ்கர் விருது விழாவுக்கு ரெடியா! எங்கு? எப்போது பார்க்கலாம்? முழு விவரம் இதோ