சமந்தா கிடையாது.. தமன்னா கிடையாது.. அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் யார் தெரியுமா?
சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் பலரும் பாலிவுட் வரை சென்று நடித்து வரும் நிலையில், அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகள் பற்றி காணலாம்.
Trisha
நடிகை த்ரிஷா இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். த்ரிஷா தான் நடிக்கும் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைப் படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.
Nayanthara
நடிகை நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு படத்திற்கு ரூ.5 முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தற்போது தி டெஸ்ட் மற்றும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் போன்றவற்றில் நடித்து வருகிறார்.
Srinidhi Shetty
இந்தப் பட்டியலில் கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கேஜிஎப் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஸ்ரீநிதி ஷெட்டி தமிழ் திரைப்படமான கோப்ராவில் நடிகர் விக்ரமுடன் ஜோடி போட்டார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.
Pooja Hegde
நடிகை பூஜா ஹெக்டே தற்போது இந்தியத் திரையுலகில் மிக முக்கியமானவராக வளர்ந்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை பூஜா ஹெக்டே சூர்யா நடிப்பில் உருவாகும் சூர்யா 43 படத்தில் நடித்து வருகிறார்.
Anushka Shetty
நடிகை அனுஷ்கா ஷெட்டி அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் 5ம் இடத்தை பெற்றுள்ளார். தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா ஷெட்டி ஒரு திரைப்படத்திற்கு சுமார் 4-7 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதாகக் கூறப்படுகிறது.
அதிக 1000 கோடி வசூல் படங்களை வைத்திருக்கும் சூப்பர்ஸ்டார் யார்? ஷாருக்கான், பிரபாஸ் இல்ல..