MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திரையரங்குகளில் இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் ஆப்பு தான்... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

திரையரங்குகளில் இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் ஆப்பு தான்... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 15 2023, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

காலங்கள் மாறினாலும் மக்களுக்கு சினிமாவின் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆனால் அதனை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுகின்றனர். எத்தனை ஆயிரம் செலவழித்தாவது முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என ரசிகர்கள் வெறித்தனமாக இருப்பதால் தான் திரையரங்குகளும் முதல் நாளில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதை தொடர்ந்து வருகின்றனர்.

24

சமீபத்தில் வெளிவந்த வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அதிகாலை காட்சிக்கு ஒரு டிக்கெட் ரூ.3000 வரை விற்கப்பட்டன. இப்படி பெரிய படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இது தொடர்பாக புகார்கள் வந்தாலும், அதுகுறித்து பெரியளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இதனிடையே கடந்த 2017-ம் ஆண்டு சூர்யாவின் சிங்கம் 3 மற்றும் விஜய்யின் பைரவா ஆகிய படங்கள் பொங்கலுக்கு ரிலீசான போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறி தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதையும் படியுங்கள்... ரிஸ்க் எடுக்க தயாராகும் லோகேஷ் கனகராஜ்... லியோ இயக்குனரை எச்சரிக்கும் ரசிகர்கள் - அப்படி என்ன செய்ய போறாரு?

34

நீதிபதி அனிதா சுமந்த் தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிக கட்டணம் வசூலித்த திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டார். 

44

அத்துடன் அதிக கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார். இந்த உத்தரவுக்கு பின்னர் திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிப்பதை கைவிடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு சினிமா பிரியர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்..! காதலர் தினத்தில் கணவர் சினேகனுக்கு காலில் மெட்டி அணிவித்த கன்னிகா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
தமிழ்நாடு
சென்னை உயர் நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அம்மாடியோவ், அழகு பொம்மாயி த்ரிஷாவின் அந்த ஒரு பதிவு! விஜயின் விவாகரத்து வதந்திக்கு மீண்டும் உயிர் கொடுத்த 'Go to People' வாசகம்!
Recommended image2
மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தினவிழா.. ஹிட்லர் உருவாகி வருகிறார்..! விஜய்யை விளாசிய அமீர்
Recommended image3
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved