- Home
- Cinema
- உதயநிதியின் கடைசி படம் - இசைக்கு ஆஸ்கர் நாயகன்... காமெடிக்கு வைகைப்புயல்.... ரொமான்சுக்கு யார் தெரியுமா?
உதயநிதியின் கடைசி படம் - இசைக்கு ஆஸ்கர் நாயகன்... காமெடிக்கு வைகைப்புயல்.... ரொமான்சுக்கு யார் தெரியுமா?
நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) தான் கடைசியாக நடிக்க உள்ள படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தீயாய் வேலை செய்து வருகிறாராம்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனாக உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். குறுகிய காலத்தில் விஜய், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்ததன் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதையடுத்து இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், நிமிர், சைக்கோ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார்.
udhayanidhi stalin
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.
இதையடுத்து அரசியலில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ள உதயநிதி, கைவசம் உள்ள படங்களை விரைவாக நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கடைசியாக ஒப்பந்தமான படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதுவே உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் இப்படத்தை பிரம்மாண்டமாக எடுக்க தீயாய் வேலை செய்கிறாராம் உதயநிதி.
அதன்படி சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமானார். இதன்மூலம் உதயநிதி படத்துக்கு முதன்முறையாக இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தில் உதயநிதி உடன் டூயட் பாட நடிகை கீர்த்தி சுரேஷை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உதயநிதியும் கீர்த்தி சுரேஷும் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது.