MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரூ.21,000 கோடி சாம்ராஜ்யத்தை ஆளும் பிரபல மாஸ் நடிகரின் மனைவி; யார் இந்த சிங்கப்பெண்?

ரூ.21,000 கோடி சாம்ராஜ்யத்தை ஆளும் பிரபல மாஸ் நடிகரின் மனைவி; யார் இந்த சிங்கப்பெண்?

21,000 கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யத்தை ஒரே ஒரு வாரிசாக கட்டிக்காத்து வரும் பிரபல சூப்பர்ஸ்டார் நடிகரின் மனைவியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Mar 17 2025, 10:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

From cinema to business: Who is the heir to the Rs 21,000 crore empire? மெகா குடும்பத்தை சேர்ந்த நடிகர் ஒருவரின் மனைவி ஆயிரம் கோடிகளுக்கு மேல் சொத்து மதிப்புடன் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் 21 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார். அந்த சிங்கப்பெண் யார்?... அவர் செய்யும் தொழில்கள் என்னென்ன? என்பது பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

26
Ram Charan, Upasana

Ram Charan, Upasana

அந்தப் பெண் வேறுயாருமில்லை நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா தான். உபாசனா காமினேனியும் நடிகர் ராம்சரணும் கடந்த 2012ம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணமாகி சுமார் 10 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த இத்தம்பதியினருக்கு கடந்த 2023ம் ஆண்டு தான் கிளிங்காரா என்கிற பெண் குழந்தை பிறந்து மெகா வீட்டின் அதிர்ஷ்ட தேவதையாக மாறியது.

36
Upasana Family

Upasana Family

டோலிவுட்டில் உள்ள பணக்கார ஹீரோக்களில் ராம் சரணும் ஒருவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சினிமா மட்டுமின்றி பல பிசினஸ்களிலும் முதலீடு செய்துள்ளார். ராம் சரணை போல் அவரது மனைவி உபாசனாவும் நிறைய சொத்துக்கள் வைத்துள்ளார். ராம்சரண் மனைவி உபாசனா மிகப்பெரிய செல்வந்தர் வீட்டு வாரிசு என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் அதிபதியாக உபாசனா பல ஆயிரம் கோடி சொத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்... 10 கிலோ உடல் எடை குறைக்க புதிய ஐடியா – டயட்டை ஸ்டார்ட் பண்ணிய ராம் சரண்!

46
Ramcharan Wife Upasana

Ramcharan Wife Upasana

ராம்சரண் மனைவி உபாசனா, தொழிலதிபர் பிரதாப் சி. ரெட்டியின் பேத்தி. அதுமட்டுமின்றி பிரபல அப்போலோ ஹாஸ்பிடல்ஸில் உபாசனா உயர்ந்த பதவியில் உள்ளார். இதனுடன் உபாசனா ‘பி பாசிடிவ்’ என்ற மேகஸினுக்கு சீஃப் எடிட்டராகவும் வேலை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி உபாசனா குடும்ப நல காப்பீட்டு நிறுவனமான TPA மேனேஜிங் டைரக்டராகவும் உள்ளார். இன்டர்நேஷனல் பிசினஸ் மார்க்கெட்டிங் அண்ட் மேனேஜ்மென்ட் படித்த உபாசனா தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

56
Upasana Networth

Upasana Networth

இப்படி இத்தனை குவாலிஃபிகேஷன்ஸ் உள்ள உபாசனா.. மெகாஃபேமிலி மருமகளாக வந்ததால்.. சிரஞ்சீவி ஃபேமிலி அதிக செல்வந்தர் குடும்பமாக மாறியது. அதுமட்டுமின்றி ராம்சரண்-உபாசனா ஜோடி இந்தியாவில் பணக்கார செலிபிரிட்டி ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஸ்டார் ஜோடியின் சொத்து மதிப்பு ரூ.2500 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உபாசனாவின் தனிப்பட்ட சொத்து மட்டுமே 1,300 கோடி இருக்கும் என்றும்.. ராம் சரண் சொத்து 1200 கோடி என்றும் கூறுகிறார்கள். 

66
Upasana Family

Upasana Family

உபாசனாவின் தாத்தா பிரதாப் சி.ரெட்டி 77,000 கோடி மதிப்பிலான வணிக சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்தியாவில் 100 பில்லியனர்களில் பிரதாப் ரெட்டியும் ஒருவர். பிரதாப் ரெட்டி தலைமையிலான அப்போலோ மருத்துவமனையின் சந்தை மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி இருக்குமாம். இவற்றிற்கு ஒரே வாரிசு உபாசனா தான். உபாசனா தந்தை அனில் காமினேனி கேஈஐ என்ற கம்பெனியை நடத்தி வருகிறார். அதேபோல் உபாசனா தாய் ஷோபனாவும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் எக்ஸிகியூட்டிவ் வைஸ் பிரசிடெண்டாக உள்ளார். இப்படி பேமிலி முழுவதும் நிறைய சொத்துக்கள் வைத்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... தனி விமானத்தில் சகோதரி, தோழிகளுடன் கும்பமேளா புறப்பட்ட ராம் சரணின் மனைவி உபாசனா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ராம் சரண்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved