ஆளே மாறிப்போய் வித்தியாசமாக இருக்கும் அதுல்யா! முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளாரா? ஷாக்கிங் போட்டோஸ்!
சமீப காலமாக நடிகைகள் தங்களுடைய அழகை மெருகேற்றிக்கொள்ள, பிளாஸ்டிக் சர்ஜெரி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் சமந்தா, ஸ்ருதி ஹாசன் என பலர் தங்களை அழகாக்கிக்கொள்ள பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ள நிலையில், நடிகை அதுல்யாவும் தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் பலர், மிகவும் வித்தியாசமாக உள்ளதாகவும், பிளாஸ்டிக் மூஞ்சி என பதிவிட்டு வருகிறார்கள்.
கோவையில் பிறந்து, வளர்ந்து... தற்போது தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்க போராடி வரும் நடிகை அதுல்யா ரவி ஆரம்ப காலத்தில் குறும்படம் மூலம் பிரபலமானவர்.
இவரது அழகும், திறமையான நடிப்பும், குறும்படத்தை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகளை பெற்று தந்தது. கடந்த 2017ம் ஆண்டு வெளியான 'காதல் கண் கட்டுதே' படத்தில் அறிமுகமான இவருக்கு அந்த படம் திருப்புமுனையாகவும் அமைந்தது.
இதை தொடர்ந்து, கதாநாயகம், ஏமாளி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, முருங்கக்காய், என அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
ஆரம்பத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த அதுல்யா... சில திரைப்படங்கள் நடித்த பின்னர் பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்ட துவங்கி விட்டார்.
அதிலும் சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்களில் கவர்ச்சியும், அழகும் அள்ளுகிறது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில் தற்போது, அதுல்யா அல்டரா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில்... அதுல்யா முகத்தில் மாற்றம் தெரிவதாகவும், அவர் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.