தாறுமாறாக உடலை ஏற்றி.. தெறிக்க விடும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், நடிகர் ஹரீஷ் கல்யாண் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரே மாதியான படங்களை தேர்வு செய்து நடிக்காமல் நடிப்பிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி வரும் ஹரீஷ் கல்யாண் தற்போது முரட்டுதனமாக உடல் எடையை கூடி மிரட்டியுள்ளார்.
இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ...
ஹரீஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின், திரைப்படங்களை அதிக கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் பிக்பாஸ் ரைசாவுக்கு ஜோடியாக நடித்த, பியர் ப்ரேமம் காதல், இன்ஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'தாராள பிரபு' படம், நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, 'கசட தபர' மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’பெல்லி சுப்லு’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கவுள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கின்றார். கிருஷ்ண வசந்த் ஒளிப்பதிவில் கிருபாகரன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை ஹவிஷ் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக, பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியாபவானி ஷங்கர் இருவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில், இருவரும் காதலர்கள் போல் அமர்ந்து பேசும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்புகள் ஆரம்பமாக துவங்கியுள்ளது.
தற்போது ஹரீஷ் கல்யாண் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை கூடி ஜிம் பாடியாக மாறியுள்ளார்.
இந்த மாற்றத்திற்கு காரணம், புதிய படத்தில் இவர் ஒப்பந்தம் என்று கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றே கூறப்படுகிறது.