MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹாப்பி ராஜ் முதல் காட்டான் வரை... மார்ச் 27ந் தேதி தியேட்டர் & OTT-ல் செம விருந்து வெயிட்டிங்

ஹாப்பி ராஜ் முதல் காட்டான் வரை... மார்ச் 27ந் தேதி தியேட்டர் & OTT-ல் செம விருந்து வெயிட்டிங்

மார்ச் மாதம் முடிவுக்கு வர உள்ள நிலையில், அதன் கடைசி வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ஏராளமான படங்கள், வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 23 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Theatre and OTT Release Movies and Web Series
Image Credit : X

Theatre and OTT Release Movies and Web Series

இந்த வாரம், அதாவது மார்ச் 23 முதல் 29 வரை, தியேட்டர் மற்றும் OTT-யில் செம என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு. நெட்ஃப்ளிக்ஸ், ஜியோஹாட்ஸ்டார் போன்ற பல தளங்களில் த்ரில்லர், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என வரிசைகட்டி படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அதேபோல் தியேட்டரிலும் புதுப்படம் ஒன்று க்யூவில் நிற்கிறது. ஜிவி பிரகாஷ் முதல் விஜய் சேதுபதி வரை பலரின் படைப்புகள் இதில் அடங்கும். அதன் முழு தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

25
ஹாப்பி ராஜ் (தியேட்டர் ரிலீஸ்)
Image Credit : X

ஹாப்பி ராஜ் (தியேட்டர் ரிலீஸ்)

தியேட்டரில் இந்த வாரம் ஒரே ஒரு படம் தான் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படத்தின் பெயர் ஹாப்பி ராஜ். அப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை மரிய ராஜ இளஞ்செழியன் இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக கெளரி நடித்துள்ளார். இப்படத்தில் அதிர்ச்சி அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் மார்ச் 27ந் தேதி தமிழ்நாட்டில் சிங்கம் போல் சிங்கிளாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் ஜிவி, அவர் எதிர்பார்த்த கம்பேக் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Related image1
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Related image2
மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
35
ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ்

வெப் சீரிஸ் காட்டான்

விஜய் சேதுபதியின் க்ரைம் த்ரில்லர் வெப் தொடரில் 'காட்டான்'-ல் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது ஒரு மர்டர் மிஸ்டரி சீரிஸ். மார்ச் 27 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் இதைப் பார்க்கலாம். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தான் இந்த வெப் தொடரை இயக்கி உள்ளார்.

இன்சைடு சீசன் 3

சைடுமென் தயாரிக்கும் 'Inside' ரியாலிட்டி ஷோவின் மூன்றாவது சீசன் இது. மார்ச் 23 முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம். ஒரு வீட்டுக்குள் பூட்டி வைக்கப்படும் பத்து கன்டென்ட் கிரியேட்டர்கள், 10 லட்சம் பவுண்ட் பரிசுத் தொகையை வெல்ல பல்வேறு சவால்களை சந்திப்பார்கள்.

45
ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்
Image Credit : instagram

ஓடிடி ரிலீஸ் வெப் தொடர்

டேர்டெவில்: பார்ன் அகெய்ன் சீசன் 2

மார்வெல் காமிக்ஸின் டேர்டெவில் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட அமெரிக்க வெப் சீரிஸ் இது. இதன் இரண்டாவது சீசனை மார்ச் 24 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பார்க்கலாம். சார்லி காக்ஸ், வின்சென்ட் டி'ஓனோஃப்ரியோ, கிறிஸ்டன் ரிட்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஹார்ட்பிரேக் ஹை சீசன் 3

'Heartbreak High' சீரிஸின் மூன்றாவது மற்றும் கடைசி சீசன் இது. மார்ச் 25 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ஹார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா, ஒரு பழிவாங்கல் மற்றும் அதன் விளைவுகளை இந்த சீசன் காட்டும்.

55
ஓடிடி ரிலீஸ் மூவீஸ்
Image Credit : instagram

ஓடிடி ரிலீஸ் மூவீஸ்

ஓ ரோமியோ

ஷாஹித் கபூர், த்ரிப்தி டிம்ரி, நானா படேகர், அவினாஷ் திவாரி, திஷா பதானி, ஃபரிதா ஜலால் நடித்த 'ஓ ரோமியோ' திரைப்படம் தியேட்டர்களுக்குப் பிறகு இப்போது OTT-க்கு வருகிறது. மார்ச் 27 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் இதைப் பார்க்கலாம்.

டிடெக்டிவ் ஹோல்

'Detective Hole' ஒரு நார்வே க்ரைம் டிராமா ஸ்ட்ரீமிங் சீரிஸ். இதில் டோபியாஸ் சாண்டெல்மன், ஜோயல் கின்னமன், பியா ஜெல்டா, கெல்லி கேல், ஈலி ஹாபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இதை மார்ச் 26 முதல் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஜனனிக்கு என்ன ஆச்சு? ஆஸ்பத்தியில் காத்திருந்த ட்விஸ்ட் - எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
அந்தர் பல்டி அடித்த நிலா... காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சோழன் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image3
மீனாவிடம் சிக்கிய டுபாக்கூர் சாமியார்... விஜயாவிடம் சவால்விட்ட முத்து - சிறகடிக்க ஆசை சீரியல் ட்விஸ்ட்
Related Stories
Recommended image1
‘கருப்பு’க்கு முன் மே மாதத்தில் ரிலீஸ் ஆன சூர்யா படங்களும்... அதன் ரிசல்டும் ஒரு பார்வை
Recommended image2
மீண்டும் செல்வராகவன் மேஜிக்! 'மனிதன் தெய்வமாகலாம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved