MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொண்டது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த ஹன்சிகா

விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொண்டது ஏன்? - முதன்முறையாக மவுனம் கலைத்த ஹன்சிகா

விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொண்டது குறித்து மவுனம் காத்து வந்த ஹன்சிகா, தற்போது முதன்முறையாக அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2023, 06:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் பப்ளி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். முன்னணி ஹீரோயினாக வலம் வந்த சமயத்திலேயே காதல் சர்ச்சையிலும் சிக்கினார் ஹன்சிகா. வாலு படத்தில் நடித்தபோது சிம்புவுக்கு ஹன்சிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த படத்தை போல் இவர்களது காதலும் தோல்வியில் முடிந்தது.

25

ஹன்சிகா என்றாலே பப்ளி ஹீரோயின் என்ற பெயர் இருந்து வந்த நிலையில், திடீரென உடல் எடையை குறைத்து அதிர்ச்சி அளித்தார் ஹன்சிகா. உடல் எடையை குறைத்த பின்னர் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதனால் சுதாரித்துக் கொண்ட ஹன்சிகா, இளம் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடிக்க தயார் என அறிவித்தார். இதையடுத்து தெலுங்கில் ஹன்சிகாவும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

35

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார் ஹன்சிகா. இப்படி சினிமாவில் பிசியாக இருக்கும்போதே கடந்தாண்டு நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இவர் சோஹைல் கத்தூரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதையும் படியுங்கள்... நம்ம சத்தம் கேட்க ரெடியா..! சிம்புவின் பிறந்தநாளுக்கு இசை விருந்து கொடுக்கும் ‘பத்து தல’ படக்குழு

45

இப்படி ஹன்சிகாவின் திருமணம் ஜாலியாக நடந்து முடிந்தாலும், அவர் திருமணம் செய்துகொண்ட சோஹைல் கத்தூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்கிற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஹன்சிகாவின் தோழியை தான் சோஹைல் கத்தூரியா முதலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின்னர் தான் ஹன்சிகா உடன் பழக்கம் ஏற்பட்டு அவரை கரம்பிடித்துள்ளார் சோஹைல் கத்தூரியா.

55

விவாகரத்து ஆனவரை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டது ஏன்? என்கிற கேள்வி பலருக்கும் எழுந்து வந்தது. இதுகுறித்து பதிலளிக்காமல் மவுனம் காத்து வந்த ஹன்சிகா, தற்போது முதன்முறையாக அதுகுறித்து மனம்விட்டு பேசி உள்ளார். நடிகை ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் வெளியான அதற்கான டீசரில், ஹன்சிகா தனது அம்மாவிடம் பேசும்போது, நீ தான் எனக்கு அடிக்கடி சொல்லி இருக்கிறாய். யாருடைய கடந்த காலத்தை பற்றி பார்க்கக் கூடாது என்று உனக்கு ஓகே என்றால் எனக்கு அது போதும் என்று கண்கலங்கியபடி ஹன்சிகா பேசியுள்ளார். இதில் சோஹைல் கத்தூரியாவின் கடந்த காலத்தை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை என்பதை ஓப்பனாக சொல்லி இருக்கிறார் ஹன்சிகா.

இதையும் படியுங்கள்... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே... பிக்பாஸ் பைனலில் தோற்றவருக்கு தளபதி 67-ல் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved