ஹன்ஷிகாவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் வெளியீடு...
அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் 'பாட்னர்'. இதில் ஹன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறதா. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Hanshika Motwani
குட்டி குஷ்பு எனபாராட்டப்பட்ட ஹன்ஷிகா. தமிழில் முன்னணி நாயகர்களான தனுஷ், விஜய், சிம்பு, என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார்.
hanshika motwani
இவரின் 50-வது படமான மகா ஹன்சிகாவுக்கு பல சிக்கல்களை கொண்டுவந்தது. இதில் ஹன்ஷிகாவின் முன்னாள் காதலரான நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
hanshika motwani
மகா படத்தில் கஞ்சா அடிப்பது போன்று போஸ் கொடுத்திருந்த ஹன்சிகாவின் லுக் பலராலும் விமர்சிக்கப்பட்டது. அதோடு புகாரும் அளிக்கப்பட்டது.
hanshika motwani
புசு புசுவென இருந்த ஹன்ஷிகா தனது உடலை ஸ்லிம்மாக மாற்றி ஓல்லி பெல்லியாக மாறினார். இதையடுத்து தனது கைவசம் 9 படங்களை வைத்துள்ளார் ஹன்சிகா.
hanshika motwani
பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் சுருதி, 105 நிமிடங்கள், மகா ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்திலும், சேட்டை இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
hanshika motwani
இதில் 'பாட்னர்' படத்தில் நடிகர் ஆதி, நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்
மேலும் செய்திகளுக்கு...Hanshika Motwani : என்னது..ஹன்ஷிகாவா இப்படி?..படப்பிடிப்பு தளத்தில் மிக மோசமாக நடந்து கொண்ட பிரபலம்..
hanshika motwani
சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ராயல் பர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
hanshika motwani
ரிலீசுக்கு தயாராகி வருகிறது 'பாட்னர்' திரைப்படம். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.