kamal haasan next : இன்று மாலை வெளியாகும் உலகநாயகன் - எச். வினோத் கூட்டணி குறித்த அப்டேட்?
இந்த படம் குறித்தான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி ஹச் வினோத் என்கிற ஹேஸ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Vikram
உலகநாயகன் கமலஹாசன் சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்இருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இவரது படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பை கொடுத்திருந்தனர். கைதி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படமும் போதை பொருள் தொடர்பான கதைக்களத்தை கொண்டிருந்தது.
kamal haasan starrer vikram breaks all box office records in tamil nadu
முன்னாள் சீக்ரெட் ஏஜென்ட்டாக நாயகன் நடித்திருந்தார். கமலின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் வெளியாகி இருந்தது. இதில் பகத் பாஸில், விஜய் சேதுபதியின் முக்கிய வேடங்களில் நடிக்க இறுதியில் சூர்யா வந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து விட்டுச் சென்று விட்டார்.
மேலும் செய்திகளுக்கு...childhood actress shruthi : குழந்தை நட்சத்திரம் ஸ்ருதி...இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?
kamal haasan bigg boss tamil season 6 promo vijay television disney plus hotstar
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். விக்ரம் உலக அளவில் 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மாஸ் காட்டியது. விதவிதமான துப்பாக்கிகளுடன் இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் வகைகள் நடித்திருந்தார் கமலஹாசன்.
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 -ல் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். முந்தைய சீசன்களிலும் இவர்தான் இணைந்திருந்தார். வார இறுதியில் கமலின் பஞ்சாயத்தை பார்க்க ஒரு கூட்டமே காத்திருக்கிறது என்றே கூறலாம்.
மேலும் செய்திகளுக்கு...ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
thunivu
அதேபோல அஜித் குமாரின் வலிமை, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்த எச்.வினோத் இதை தொடர்ந்து தற்போது அஜித் குமார் நடித்து வரும் துணிவு என்னும் படத்தை இயக்கிய வருகிறார். இந்த படத்தில் மலையாள நாயகி மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் விநாயகன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
thunivu
படம் ஆரம்பத்தில் இருந்து எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்த பட குழு சமீபத்தில் தான் படத்தின் முதல் பார்வைகளை வெளியிட்டு இருந்தது. வங்கிக்கொள்ளை தொடர்பான கதைக்களம் என கூறப்பட்ட துணிவு படத்தின் பர்ஸ்ட் லுக்கில் மேலே ரூபாய் நோட்டு இருக்க ஆஸ்வாசமாக அமந்திருக்கிறார் அஜித் குமார்.
இந்த படத்தில் இரு வேறு வேடங்களில் அவர் நடிப்பதாகவும், மங்காத்தாவிற்கு நிகரான கதைகளத்தை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உலகநாயகனை வைத்து படம் இயக்குவது குறித்து ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.
kamal haasan
இதற்காக கமலஹாசனையும் நேரில் சந்தித்திருந்தார் வினோத். தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி இந்த படம் குறித்தான அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதையொட்டி ஹச் வினோத் என்கிற ஹேஸ் டேக் ட்ரெண்டாகி வருகிறது.