- Home
- Cinema
- Kingston Day 1 Box Office: ஹாரிபாட்டர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பாஸ் ஆனதா 'கிங்ஸ்டன்'? முதல் நாள் வசூல் !
Kingston Day 1 Box Office: ஹாரிபாட்டர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்து பாஸ் ஆனதா 'கிங்ஸ்டன்'? முதல் நாள் வசூல் !
இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமாரின் 25-ஆவது படமாக உருவாகியுள்ள 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், அவரது 25-ஆவது படமாக நேற்று (மார்ச் 7-ஆம் தேதி) ரிலீஸ் ஆன திரைப்படம் தான் 'கிங்ஸ்டன்'. அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படம், இந்தியாவிலேயே முதல் கடல் அட்வெஞ்சர் மற்றும் திரில்லர் படமாக உருவாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
திவ்ய பாரதி
இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக, 'பேச்சிலர்' படத்தில் ஜிவிக்கு ஜோடியாக நடித்து, பிரபலமான நடிகை திவ்ய பாரதி நடித்துள்ளார். முதல் படத்தில் மாடர்ன் பெண்ணாக ஜிவி பிரகாஷுடன் மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்த திவ்யபாரதி, இந்த படத்தில் ஹோம்லி ரோலில் பாவாடை - தாவணியில் நடித்து அசரவைத்துள்ளார்.
Kingston Review : ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் கலக்கலா? சொதப்பலா? விமர்சனம் இதோ
ஜிவி நடித்து - இசையமைத்துள்ள கிங்ஸ்டன்
ஜிவி பிரகாஷ் தான் 'கிங்ஸ்டன்' படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இதுவரை ஜிவி பிரகாஷ் நடித்த படங்களை விட, இந்த படத்தின் பட்ஜெட் அதிகம் என்று கூறப்படுகிறது. அதே போல் ஜிவி பிரகாஷின் 25-ஆவது படம் என்பதால், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில், நேற்று வெளியானது முதலே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
திக் திக் காட்சிகளுடன் கடலில் படமாக்கப்பட்ட கிங்ஸ்டன்:
அதாவது கடலுக்கு செல்லும் மீனவர்கள், குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு சென்று இரவு நேரங்களில் தங்கி மீன் பிடித்தால் அவர்கள் மர்மமான முறையில் மரணமடைகிறார். இதற்க்கு பேய்கள் தான் காரணம் என கூறப்படும் நிலையில், ஜிவி பிரகாஷ் ஒரு கேங்குடன் கடலுக்கு செல்கிறார். பின்னர் நடுக்கடலில் என்ன நடக்கிறது? என்பதை திக் திக் காட்சிகளுடன் படமாக்கி உள்ளார் இயக்குனர் .
அமானுஷ்யங்கள் நிறைந்த கடல் பயணம்; மிரள வைக்கும் ஜிவி பிரகாஷின் ‘கிங்ஸ்டன்’ டிரைலர்
கிங்ஸ்டன் படத்தின் முதல் நாள் வசூல்
கடலில் ஒரு அட்வென்ச்சர் படம் எடுப்பது என்பது எளிதான காரியம் இல்லை என்றாலும், இதனை கிங்ஸ்டன் படக்குழு சிறப்பாக கையாண்டு உள்ளதாக கூறப்பட்டது. அதே போல் VFX காட்சி, படத்தொகுப்பு, மற்றும் இசை போன்றவை பாராட்டுகளை குவித்து வந்தாலும், கதையில் ஏற்பட்ட தொய்வு இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைக்க காரணமாக மாறியுள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் ரசிக்கும் விதமாக இப்படம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் இப்படம் ஹாரிபாட்டர் போல் இருக்கும் என கூறிய நிலையில், தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி 'கிங்ஸ்டன்' திரைப்படம் முதல் நாளில், ரூ.90 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்ததை விட முதல் நாள் வசூல் குறைவு என்றாலும், சனி - ஞாயிறு விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.