சன்னி லியோனுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகையா? அரசுக்கே விபூதி அடித்த ஷாக்கிங் சம்பவம்
Sunny Leone : சத்தீஸ்கரில் மஹதாரி வந்தன் யோஜனா திட்டத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெயரில் போலி கணக்கை உருவாக்கி மாதம் ரூ.1,000 மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Sunny leone
ஏழை எளிய மக்களுக்கு அரசு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அப்படி அரசால் வழங்கப்படும் திட்டங்களில் சில மோசடிகளும் நடக்கின்றன. அதிகாரிகள் எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும், அவை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கின்றன. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில், திருமணமான பெண்களுக்காக அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயர் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரது பெயரில் உள்ள கணக்கில் மாதந்தோறும் அரசிடமிருந்து ரூ.1,000 வரவு வைக்கப்படுவதைக் கண்டுபிடித்து இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் உண்மை வெளிப்பட்டது.
Sunny leone Name in Government Scheme
உண்மையில் நடந்தது என்னவென்றால்.. சத்தீஸ்கரில் உள்ள பாஜக அரசு மஹதாரி வந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் அம்மாநிலத்தில் உள்ள திருமணமான பெண்களுக்கு மாதந்தோறும் அவர்களின் கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கிறது. சமீபத்தில் அதிகாரிகள் பெண்களின் கணக்குகளைப் பரிசோதித்தபோது, பாலிவுட் நடிகை சன்னி லியோனின் பெயரில் ஒரு கணக்கு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இது குறித்து விசாரணை நடத்தியபோது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் சன்னி லியோன் வரை; இரட்டைக் குழந்தை பெற்ற பிரபலங்கள்!
Government Scheme Fraud
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியில் உள்ள தாலூர் கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர ஜோஷி என்ற நபர் தான் சன்னி லியோன் பெயரில் போலி வங்கிக் கணக்கைத் திறந்து, திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் மஹதாரி வந்தன் யோஜனா திட்டத்தில் பதிவு செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் அரசிடமிருந்து மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வருவதாகக் குறிப்பிட்டனர். இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.
Government Scheme Fraud in Sunny Leon name
இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகளைச் சரிபார்க்கும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.ஹரீஷ், முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கை முடக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு உத்தரவிட்டார். சன்னி லியோன் பெயரில் மகளிர் உதவித் தொகை பெறப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... "பேசவேண்டிய இடத்தில் கட்டாயம் பேசுங்க" - நடிகைகளுக்கு தைரியம் சொல்லிய சன்னி லியோன்!