- Home
- Cinema
- Actress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!
Actress Ranya Rao: யூடியூப் பார்த்து தங்கம் கடத்தலில் ஈடுபட்டேன் - பகீர் கிளப்பிய ரன்யா ராவ்!
Gold Smuggling: கன்னட நடிகை ரன்யா ராவ் இந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில், தங்கக் கடத்தலில் ஈடுபட்டு பிடிப்பட்ட நிலையில், விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவலைகளை வெளியிட்டுள்ளார்.

இந்த மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் தங்கக் கடத்தலில் பிடிபட்ட கன்னட நடிகை ரன்யா ராவுக்கு எதிரான விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
யூடியூப் வீடியோ பார்த்து தங்கம் கடத்திய ரன்யா
அவர் முதன்முறையாக துபாயிலிருந்து - பெங்களூருக்கு தங்கம் கடத்தியது இதன் மூலம் தெரியவந்துள்ளது. தங்கம் கடத்த பிளான் பண்ண, யூடியூப் வீடியோக்களை பார்த்து கற்று கொண்டதாக கூறியுள்ளார். (I learned how to hide gold through YouTube) ரன்யாவின் கைது மற்றும் கடத்தல் விவகாரம், இவரின் வளர்ப்பு தந்தையான கர்நாடக போலீஸ் டிஜிபி கே.ராமச்சந்திர ராவ்வின் பதவிக்கும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
தங்கக் கடத்தல் வழக்கு: நீதிமன்றத்தில் கதறி அழுத நடிகை ரன்யா ராவ்!
விமான நிலையத்தில் பிடிபட்ட ரன்யா:
நடிகை ரன்யா ராவ், மார்ச் 3,-ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டார். தங்கத்தின் மதிப்பு சுமார் ₹12.56 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ரன்யா ராவ்... இதை தன் உடம்புல மறைத்து இந்த படத்தலில் ஈடுபட்டார். ஜீன்ஸ் மற்றும் ஷூவில் தங்கத்தை மறைத்ததாகவும், இந்த டெக்னிக்கை யூடியூப் வீடியோ பார்த்து கற்று கொண்டதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்தில் மட்டும் 30 முறை பயணம்:
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரன்யா துபாய்க்கு 30 முறை பயணம் செய்துள்ளார். இப்படி ஒவ்வொரு முறையும் செல்லும் போது பல கிலோ தங்கம் கடத்தியுள்ளார். ஒவ்வொரு கிலோ தங்கத்திற்கும் ரன்யாவுக்கு ₹1 லட்சம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு பயணத்திலும் ₹12-13 லட்சம் சம்பாதித்துள்ளார். தங்கத்தை மறைக்க ஸ்பெஷலா மாடிஃபை பண்ண ஜாக்கெட் மற்றும் பெல்ட்டை பயன்படுத்தி உள்ளார். இந்த முறை தங்கத்தை ஜாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தார். விசாரணையின்போது, கடத்தல் முயற்சிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தனக்கு தெரியாத நம்பரிலிருந்து தொடர்ந்து போன் வந்ததாக ரன்யா ராவ் கூறினார். ஆனால் அவர் யார் என தெரியவில்லை என்பது பற்றியும் கூறியுள்ளார்.
தங்கக் கட்டிகளை என் உடலில் ஒட்டி கொண்ட ரன்யா
மேலும் இந்த முறை ஏர்போர்ட் வாஷ்ரூமில் தங்கக் கட்டிகளை என் உடலில் ஒட்டி கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி ஜீன்ஸ் மற்றும் ஷூவில் மறைத்துள்ளார். இந்த டெக்னிக்கை யூடியூப் வீடியோ பார்த்து கத்துக்கிட்டேன்" என தெரிவித்துள்ளார்.
₹12.56 கோடி மதிப்புள்ள இந்தத் தங்கம்:
ஆனால் இந்த முறை இவர் 14.2 கிலோ தங்கத்துடன் பெங்களூரு விமான நிலையத்தில் பிடிபட்டார். ₹12.56 கோடி மதிப்புள்ள இந்தத் தங்கம் பிஸ்கட்டை அவர் உடலில் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ரன்யா தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய வழக்கு CBI வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.