4 மாதத்தில் 3 ஹிட் கொடுத்து ரூ.850 கோடி வசூல் அள்ளிய இந்த பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்?
4 மாத இடைவெளியில் வரிசையாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் லக்கி ஹீரோயினாக வலம் வரும் நடிகையின் குழந்தைப்பருவ புகைப்படங்கள் வைரலாகின்றன.

Meenakshi Chaudhary Rare Childhood Photos : சினிமாவை பொறுத்தவரை ஒரு படம் ஹிட் ஆனாலோ அல்லது பிளாப் ஆனாலோ அதன் ரிசல்ட் அப்படத்தில் நடிக்கும் ஹீரோவின் மீது தான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அதன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை வைத்து தான் நடிகர்களின் அடுத்த பட வியாபாரமே நடக்கும். ஆனால் ஹீரோயின்களைப் பொறுத்தவரை அவர்கள் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு பெரிய வெற்றிப் படங்களை கொடுத்தாலும் அவர்கள் அதிகம் கொண்டாடப்படுவதில்லை. அப்படி தென்னிந்திய திரையுலகில் வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்து வரும் நடிகை ஒருவரின் குழந்தைப் பருவ புகைப்படங்களை தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
Meenakshi Chaudhary Childhood Photos
அந்த நடிகை வேறுயாருமில்லை... மீனாட்சி செளத்ரி தான். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த கொலை படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் நடித்த மீனாட்சிக்கு அடுத்ததாக தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது.
Meenakshi Chaudhary Unseen Childhood Photos
அதை ஏற்று வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார் மீனாட்சி. கோட் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை ஆடியது. கோட் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.450 கோடி வசூலித்து மாஸ் காட்டியது.
இதையும் படியுங்கள்... ஆந்திரா பிராண்ட் தூதராக மீனாட்சி சௌத்ரி?
Meenakshi Chaudhary Rare Photos
கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மீனாட்சி. இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இப்படம் பான் இந்தியா அளவில் அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
Meenakshi Chaudhary
லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றிக்கு பின்னர் மீனாட்சி செளத்ரி நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சங்கராந்திக்கு வஸ்துன்னாம் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. தெலுங்கு படமான இதில் வெங்கடேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கி இருந்தார். இதில் மீனாட்சி செளத்ரி உடன் ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு ஹீரோயினாக நடித்திருந்தார்.
Box Office Queen Meenakshi Chaudhary
சங்கராந்திக்கு வஸ்துன்னாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை ஆடியது. இதன்மூலம் நான்கு மாத இடைவெளியில் வரிசையாக மூன்று ஹிட் படங்களை கொடுத்தது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் ரூ.850 கோடிக்கு மேல் வசூலை அள்ளி தென்னிந்திய திரையுலகின் ராசியான நடிகையாக வலம் வருகிறார் மீனாட்சி செளத்ரி.
இதையும் படியுங்கள்... விஜய், அஜித் படங்கள் கூட பண்ணாத சாதனை; ஓடிடியில் புது வரலாறு படைத்த லக்கி பாஸ்கர்