அந்த படத்துல நடிச்சது தான் நான் செஞ்ச மிகப்பெரிய மிஸ்டேக் - அனுஷ்கா ஷெட்டி ஓபன் டாக்
தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தன்னுடைய கெரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு பற்றி பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.

Anushka Shetty Biggest Mistake
டோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா, லேடி ஓரியண்டட் படங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த 'காட்டி' படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியடைந்தது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘சூப்பர்’ (2005) படம் மூலம் அறிமுகமானார் அனுஷ்கா. கிளாமர், நடிப்பு இரண்டையும் சமநிலைப்படுத்தி தனக்கென சினிமாவில் தனி இடத்தைப் பிடித்தார். தற்போது தன்னுடைய கெரியரில் தான் செய்த மிகப்பெரிய தவறு பற்றி மனம்விட்டு பேசியுள்ளார் அனுஷ்கா.
அனுஷ்காவின் மிகப்பெரிய தவறு
சமீபத்திய பேட்டியில், இதுகுறித்து பேசிய அவர் கடந்த 2008-ம் ஆண்டு பாலகிருஷ்ணாவுடன் தான் நடித்த ‘ஒக்க மகாடு’ படத்தில் நடித்தது தான் தன்னுடைய கெரியரின் மிகப்பெரிய தவறு என்றார். அப்போது விவரம் புரியாமல் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், பின்னர் அது தனக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியதாகவும் கூறினார். அதேபோல் ராஜமெளலி இயக்கிய ‘பாகுபலி’ அனுஷ்காவின் கேரியரில் ஒரு கேம் சேஞ்சர் படமாக அமைந்தது. அதன்பிறகு, ‘பாகமதி’, ‘நிசப்தம்’, ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார். அப்படங்கள் அனுஷ்காவுக்கு கைகொடுக்கவில்லை.
சிங்கிளாக இருக்கும் அனுஷ்கா
இதையடுத்து சமீபத்தில் அவர் நடித்த 'காட்டி' படம் வெளியானது. அப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் தோல்விக்கு பின்னர் சோசியல் மீடியாவில் இருந்து விலகி இருக்கிறார் அனுஷ்கா. தற்போது நடிகை அனுஷ்காவுக்கு 44 வயது ஆகிறது. ஆனால் இதுவரை அவர் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். அனுஷ்கா அவ்வப்போது காதல் கிசுகிசுவிலும் சிக்குவதுண்டு. குறிப்பாக, பிரபாஸை அவர் காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் உலா வந்தன.
பாகுபலிக்கு பின் சரிந்த அனுஷ்காவின் கெரியர்
ஆனால் அவற்றையெல்லாம் திட்டவட்டமாக மறுத்த அனுஷ்கா, பிரபாஸ் தன்னுடைய நண்பர் என்று விளக்கம் அளித்தார். அனுஷ்காவை போல் நடிகர் பிரபாஸும் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கிறார். அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவரின் கெரியரிலுமே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது பாகுபலி தான். அப்படத்திற்கு பின்னர் பிரபாஸ் பான் இந்தியா நாயகன் ஆகிவிட்டார். ஆனால் அனுஷ்காவின் கெரியர் அப்படியே அதளபாதாளத்துக்கு சென்றுவிட்டது.