விஜய்யின் தாத்தா ஜெமினி கணேசனா?... வாரிசு டிரைலரில் இதை கவனிச்சீங்களா..!
வாரிசு டிரைலரில் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை கண்டறிந்து அதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
விஜய்யின் வாரிசு படம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், இன்று வாரிசு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு பிடித்தபடி இந்த டிரைலர் அமைந்திருந்தாலும், நெட்டிசன்கள் சிலர் சமூக வலைதளங்களில் வாரிசு டிரைலரை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
வாரிசு டிரைலரை பார்ப்பதற்கு சீரியல் போல் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதேபோல் இது வம்சியின் முந்தைய படங்களை சேர்ந்து பார்த்தது போல் இருப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். அதேபோல் வாரிசு டிரைலரில் ஜெமினி கணேசனின் புகைப்படம் இடம்பெற்று இருப்பதை கண்டறிந்து அதையும் சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் பேசும், “அப்பா ஜெமினி கணேசன் பா...” என்கிற டயலாக்கோடு மீம் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வாரிசு டிரைலர் பார்த்து அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்... ஏன் தெரியுமா?
இதன்மூலம் வாரிசு படத்தில் விஜய்யின் தாத்தாவாக ஜெமினி கணேசனை காட்டுவார்கள் போலத் தெரிகிறது. இப்படி ட்ரோல்கள் ஒருபக்கம் நடந்து வந்தாலும், வெளியான 11 நிமிடத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது இந்த டிரைலர். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான துணிவு படத்தின் டிரைலர் கூட 1 மில்லியன் பார்வைகளை எட்ட 15 நிமிடங்கள் ஆனது. ஆனால் வாரிசு டிரைலர் 4 நிமிடங்களுக்கு முன்னதாகவே அந்த மைல்கல்லை எட்டிவிட்டது. 24 மணிநேரத்தில் 30 மில்லியன் என்கிற பீஸ்ட் படத்தின் சாதனையை வாரிசு டிரைலர் முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இதையும் படியுங்கள்... துணிவுக்கு போட்டியாக செம்ம மாஸா... கெத்தா ரிலீசானது தளபதி விஜய்யின் வாரிசு பட டிரைலர்