- Home
- Cinema
- விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் என்னாச்சு? - ஒரே அப்டேட்டில் ரசிகர்களை மெர்சலாக்கிய கவுதம் மேனன்
விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் என்னாச்சு? - ஒரே அப்டேட்டில் ரசிகர்களை மெர்சலாக்கிய கவுதம் மேனன்
VTV 2 : சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனன் விண்ணைத்தாண்டி வருவாயா 2-ம் பாகம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளார்.

காதல் படங்கள் இயக்குவதில் கைதேர்ந்தவர் கவுதம் மேனன். இவர் இயக்கிய காதல் படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா தான். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. சிம்பு - திரிஷாவின் கெமிஸ்ட்ரியும், ஏ.ஆர்.ரகுமானின் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
பொதுவாக ஒரு படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகிவிட்டால், அதன் இரண்டாம் பாகம் குறித்த எப்போது உருவாகும் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழத்தொடங்கிவிடும். அந்த வகையில், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் எப்போது உருவாகும் என்கிற கேள்வி தொடர்ந்து எழுந்து கொண்டு தான் இருக்கிறது.
இதற்காக கொரோனா ஊரடங்கு சமயத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்கிற குறும்படத்தை எடுத்து வெளியிட்ட கவுதம் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா 2 உருவாவதை அதன் மூலம் சூசகமாக அறிவித்திருந்தார். ஆனால் இதன்பின்னர் பல்வேறு படங்களில் அவர் பிசியானதால் அப்படம் குறித்த பேச்சும் குறைந்தது.
இந்நிலையில், சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் கவுதம் மேனனிடம், சிம்பு - திரிஷாவை வைத்து எப்போது படம் எடுப்பீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு நிச்சயம் எடுப்பேன் என பதிலளித்த கவுதம் மேனன், விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் நடந்து வருவதாக கூறினார். அவரின் இந்த பதில் சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ‘படிப்பும், நடிப்பும் சிறக்கட்டும்’ பிரபல நடிகரின் மகனுக்கு சிவகார்த்திகேயன் சொன்ன சர்ப்ரைஸ் வாழ்த்து
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.