Sivakarthikeyan : இன்று பிறந்தநாள் காணும் பிரபல நடிகரின் மகனுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்குமாரின் மகனான அருண் விஜய், கடந்த 1995-ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படம் தான். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய்.

இப்படத்துக்கு பின்னர் அவரது கெரியர் அசுர வளர்ச்சி கண்டது. இதையடுத்து அவர் நடித்த தடம், குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், மாஃபியா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிப்பில் யானை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹரி இயக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் மாதம் ரிலீசாக உள்ளது.

நடிகர் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் கடந்த மாதம் வெளியான ஓ மை டாக் திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். நாய்க்கும், சிறுவனுக்கும் இடையேயான பாசப்பிணைப்பை எதார்த்தமாக சொல்லியிருந்த இப்படத்தில் நடிகர் அருண்விஜய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தனர்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் அர்னவ் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள அருண் விஜய், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம், லவ் யூ, கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும், உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் அர்னவுக்கு கிடைக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

Scroll to load tweet…

இதையடுத்து அருண் விஜய்யின் டுவிட்டை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், “பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி, ஓ மை டாக் படத்தில் உங்களது நடிப்பை என்ஜாய் பண்ணேன். உங்களது படிப்பும், நடிப்பும் சிறக்க வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... vijay son Jason sanjay : விஜய் மகனுக்கு நூல்விடும் பிரபல சீரியல் நடிகை.... அவரின் ‘அந்த’ ஆசை நிறைவேறுமா?