MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கேம் சேஞ்சர் vs வணங்கான் vs மதகஜராஜா! பொங்கல் வின்னர் யார்?

கேம் சேஞ்சர் vs வணங்கான் vs மதகஜராஜா! பொங்கல் வின்னர் யார்?

2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போட்டி போட்டு ரிலீஸ் ஆன கேம் சேஞ்சர், வணங்கான் மற்றும் மதகஜராஜா ஆகிய படங்களில் வெற்றிபெற்றது யார் என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jan 12 2025, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pongal Release Movies

Pongal Release Movies

2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை அஜித்தின் தல பொங்கலாக தான் இருக்கும் என பேச்சு அடிபட்டது. இதற்கு காரணம் அஜித் நடித்த விடாமுயற்சி பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அப்படத்தை கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகிக் கொண்டிருந்த சூழலில் புத்தாண்டன்று பேரிடியாய் வந்தது ஒரு அறிவிப்பு. அதன்படி அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்கிற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
Game Changer

Game Changer

இதனால் அடுத்தடுத்து பொங்கல் ரேஸில் படங்கள் குவிந்தன. அப்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலாவின் வணங்கான், விஷால் நடித்த மதகஜராஜா ஆகிய மூன்று படங்கள் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகி உள்ளன. இதில் கேம் சேஞ்சர் மற்றும் வணங்கான் ஆகிய படங்கள் ஜனவரி 10ந் தேதி ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களுமே இவர்கள் இருவருக்கும் கம்பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படியுங்கள்... 50 செகண்டுக்கு 5 கோடி! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகையா?

35
Vanangaan

Vanangaan

ஆனால் கேம் சேஞ்சர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்தியன் 2 படத்தோடு ஒப்பிடுகையில் கேம் சேஞ்சர் எவ்வளவோ பரவாயில்லை என்கிற பேச்சும் உள்ளது. அதேபோல் பாலா படம் என்றால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் வணங்கான் படம் தாக்கத்தை ஏற்படுத்தாதது மட்டும் ஒரு நெகடிவ்வாக உள்ளது. இருந்தாலும் அவருக்கு ஒரு கம்பேக் படமாக வணங்கான் நிச்சயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

45
Madha Gaja Raja

Madha Gaja Raja

இந்த இரண்டு படங்களும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றாலும், இந்த பொங்கல் ரேஸில் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக இணைந்து வெற்றியை தட்டிச் சென்று இருக்கிறது மதகஜராஜா திரைப்படம். சுந்தர் சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் ஆகியோர் நடித்த இப்படம் பக்கா பொங்கல் ட்ரீட்டாக வந்துள்ளதாக படம் பார்த்த அனைவரும் கூறி வருகின்றனர். இதனால் ஒரிஜினல் பொங்கல் வின்னராக மதகஜராஜா மாறி இருக்கிறது.

55
Pongal Winner

Pongal Winner

சுந்தர் சி இயக்கிய இப்படம் கடந்த 2013-ம் ஆண்டே எடுத்துமுடிக்கப்பட்டது. பைனான்ஸ் பிரச்சனையால் சுமார் 12 ஆண்டுகள் ரிலீஸ் ஆகாமல் இருந்த இப்படம் இன்று பொங்கல் விருந்தாக ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ் சினிமா வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அரண்மனை 4 படம் மூலம் முதல் 100 கோடி வசூல் படத்தை கொடுத்த சுந்தர் சி. 2025-ன் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக மதகஜராஜாவை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறி வருகிறது.

இதையும் படியுங்கள்... வசூலில் கேம் சேஞ்சரை ஓவர்டேக் செய்த வணங்கான் - இரண்டே நாளில் இம்புட்டு கலெக்‌ஷனா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
Game Changer திரைப்படம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved