50 செகண்டுக்கு 5 கோடி! இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்குவது இந்த தமிழ் நடிகையா?
பாலிவுட் நடிகைகள் தான் அதிக சம்பளம் வாங்குவார்கள் என்கிற பிம்பம் இருக்கிறது, ஆனால் தமிழ் நடிகை ஒருவர் 50 செகண்டுக்கு 5 கோடி வாங்கி இருக்கிறார். அவர் யார் என்பதை பார்க்கலாம்.
Highest Paid Actress
கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் இந்த நடிகை, இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார்களான ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஷாருக்கான், மோகன்லால் என அனைவருடனும் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டில் தனக்கென ஒரு தனி ரசிகர் படையையே உருவாக்கி வைத்து இருக்கிறார்.
Highest Paid Actress in India
இவர் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே ரூ.1000 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்திருக்கிறார். அந்த சாதனையை எந்த நடிகையும் முறியடிக்கவில்லை. 2018-ம் ஆண்டில் வெளிவந்த ஃபோர்ப்ஸ் இந்தியா டாப் 100 பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகையும் இவர்தான்.
Highest Paid Actress in Tamil Cinema
20 ஆண்டுகளில் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், பல்வேறு விருதுகளையும் வென்று குவித்துள்ளார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவருக்கு ஆரம்பத்தில் நடிகையாக வேண்டும் என்கிற ஐடியாவே இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் தொகுப்பாளினியாக பணியாற்றிய இவர் சினிமாவிற்குள் வந்ததே ஒரு விபத்து தான்.
Highest Paid Actress Salary
சினிமாவில் நடித்தபோது இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகும் முடிவில் இருந்த இந்த நடிகை பின்னர் பீனிக்ஸ் பறவை போல் வந்து நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார். இயக்குனரை காதல் திருமணம் செய்துகொண்ட இந்த நடிகை வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... என் வெற்றிக்கு காரணம் இது தான்! 2 விட்டுக்கொடுக்க கூடாத விஷயங்கள்; பெண்களை ஊக்கப்படுத்திய நயன்தாரா!
Highest Paid Actress Nayanthara
இவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறாரோ, அதேபோல் இவர் எதிர்கொண்ட சர்ச்சைகளும் ஏராளம். அந்த நடிகை வேறு யாருமில்லை லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான். தற்போது இவருக்கு வயது 40ஐ எட்டிவிட்டாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகியாக வலம் வருகிறார். இவருக்கு ஒரு படத்துக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
Nayanthara Salary
இவர் ஹீரோயினாக மட்டுமின்றி ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். அந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், இந்தியளவில் எந்த நடிகையும் வாங்காத சம்பளமாக 50 விநாடி விளம்பரத்தில் நடிக்க ரூ.5 கோடி சம்பளம் வாங்கி வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார் நயன்தாரா.
Nayanthara Family
டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிப்பதற்காக தான் அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தபோது அதை ஆவணப்படமாக எடுத்து அதன் மூலம் ரூ.25 கோடி சம்பாதித்தார். இவர் சொந்தமாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... புர்ஜ் கலீபா முன்பு கணவர் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டை வரவேற்ற நயன்தாரா! வைரல் போட்டோ!