MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சாவித்ரி, ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார்ஸ்..

சாவித்ரி, ஸ்ரீதேவி முதல் நயன்தாரா வரை.. தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார்ஸ்..

தென்னிந்திய சினிமாவில் வெறும் பாடல்களில் மட்டும் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யாமல் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பல நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் சாவித்ரி முதல் நயன்தாரா வரை தென்னிந்திய சினிமாவின் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

2 Min read
Ramya s
Published : Aug 13 2024, 04:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
South Lady Superstars

South Lady Superstars

ஒரு படத்திற்கு ஹீரோக்கள் எப்படி முக்கியமோ ஹீரோயின்களும் அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். வெறும் பாடல்களில் மட்டும் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்யாமல் நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பல நடிகைகளில் இருக்கின்றன. அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் எவர்கிரீன் லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

28
Savitri

Savitri

சாவித்ரி :

நடிகைகள் என்றாலே அதில் சாவித்ரியின் பெயரை தவிர்க்க முடியாது. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வந்த சாவித்ரி,  இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகையர் திலகம் என்று அழைக்கப்படும் சாவித்ரி 1950 மற்றும் 1960களில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தார். தமிழ், தெலுங்கில் எண்ணற்ற ஹிட் படங்களில் அவர் நடித்திருந்தார்.

38
Sridevi Kapoor

Sridevi Kapoor

ஸ்ரீதேவி :

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் ஹிந்தியில் அறிமுகமான அவர் பாலிவுட்டிலும் முன்னணி நாயகியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சிறிது காலம் நடிப்பதில் இருந்து விலகி இருந்த அவர் இங்கலீஷ், விங்க்லீஷ் மூலம் கம்பேக் கொடுத்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர் 2018-ம் ஆண்டு துபாய் சென்றிருந்த போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

48
Soundarya

Soundarya

90களில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. தமிழ், தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் பல் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்தியாவின் உச்ச நடிகையாக சௌந்தர்யா வலம் வந்தார். எனினும் 2004-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் சௌந்தர்யா உயிரிழந்தார்.

58
Ramya Krishnan

Ramya Krishnan

ரம்யா கிருஷ்ணன்

தனது ஆரம்பக் கட்ட சினிமா வாழ்க்கையில் பல பின்னடைவுகளை சந்தித்தார் ரம்யா கிருஷ்ணன், எனினும் படையப்பா படத்தில் நெகட்டிவ் ரோலி நடித்த ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த படம் திருப்பு முனையாக அமைந்தது. தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார்.

68
Anushka Shetty

Anushka Shetty

அனுஷ்கா ஷெட்டி :

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ரெட்டி தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்  ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். அருந்ததி என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தின் மூலம் பிரபலமான அனுஷ்கா தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பாகுபலி 1, 2 படங்களின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் ஈர்த்தார். தற்போது தெலுங்கு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

78
Trisha

Trisha

த்ரிஷா :

சவுத் குயின் என்று அழைக்கப்படும் த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கில் பல ஹிட் படங்களில் நடித்த த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். தற்போது தக் லைஃப், விடாமுயற்சி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

88
Nayanthara

Nayanthara

நயன்தாரா :

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாவும் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இடை இடையே பல தோல்விகளை சந்தித்த அவர் ஜவன் படத்தின் மூலம் நடித்து வருகிறார். அவர் தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
திரிஷா
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved