சாய் பல்லவி முதல் மாதவன் வரை: இந்த பிரபலங்கள் எல்லாம் இவ்வளவு படிச்சிருக்காங்களா?
சில தென்னிந்திய நடிகர்களின் கல்வித்தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமா, பல திறமையான நடிகர்களை கொண்டுள்ளது. தங்கள் நடிப்பு திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை நடிகர், நடிகைகள் பெற்றுள்ளனர். ஆனால் தென்னிந்திய நட்சத்திரங்களில் பலரும் குறிப்பிடத்தக்க கல்வித் தகுதிகளை பெற்றுள்ளனர் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. எனவே சில தென்னிந்திய நடிகர்களின் கல்வித்தகுதி குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாய் பல்லவி : மிகவும் திறமையான பன்முகத்தன்மை கொண்ட நடிகைகளில் சாய் பல்லவியும் ஒருவர். தனது இயல்பான நடிப்பு, பல வகையான உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் திறனால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஆனால் சாய் பல்லவி தனது கல்வித்தகுதிக்காவும் அறியப்படுகிறார். கோவையில் உள்ள TBILISI மாநில பல்கலைக்கழகத்திப் MBBS பட்டம் பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெற்றிகரமான படங்களில் நடித்துள்ளார். சாய் பல்லவி ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா மந்தனா : நேஷனல் கிரஷ் என்று அறியப்படும் நடிகை ராஷ்மிகா, 3 டிகிரி பெற்றுள்ளார். பெங்களூரு எம் எஸ் ராமையா கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். ராஷ்மிகாவின் இந்த கல்விச் சாதனைகள் அவரது அறிவுத்திறன் மற்றும் அவரது கல்விக்கான முழுமையான அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன. கன்னடம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் ராஷ்மிகா பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் : நம்மில் பலருக்கு கணிதம் எப்போதுமே பிடிக்காத விஷயமாக இருக்கும். ஆனால் நடிகை, ரகுல் ப்ரீத் சிங்கின் கணிதத் திறமை அவரது நடிப்புத் திறனைப் போலவே ஈர்க்கக்கூடியது. ரகுல் ப்ரீத் சிங் டெல்லியில் உள்ள இயேசு மற்றும் மேரி கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றவர் ஆவர். ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்து வருகிறார்.
Prabhas
பிரபாஸ் : பாகுபலி படத்தின் மூலம் பலரையும் ஈர்த்த நடிகர் பிரபாஸ் ஒரு தகுதி வாய்ந்த என்ஜினியர் ஆவார். ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ சைதன்யா கல்லூரியில் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் (பி. டெக்) பெற்றவர். நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் சலார், கல்கி 2898 போன்ற அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.
நாகார்ஜுனா அக்கினேனி : நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனா அக்கினேனி இந்திய சினிமாவிற்கு அபரிமிதமான பங்களிப்பை அளித்துள்ளார். அவர் தெலுங்கில் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அவர் ஹைதராபாத்தில் உள்ள லிட்டில் ஃப்ளவர் ஜூனியர் கல்லூரி, கிண்டி பொறியியல் கல்லூரி மற்றும் அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் (B.E.) மற்றும் ஆட்டோமொபைல் பொறியியலில் முதுகலை (M.S.) பட்டம் பெற்றுள்ளார் என்பது பலருக்கும் தெரியாது.
கார்த்தி : தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் ஈர்த்து வரும் கார்த்தி, நுணுக்கமான மற்றும் வெளிப்படையான நடிப்புக்காக பலரின் பாராட்டையும் பெற்று வருகிறார். இருப்பினும், கார்த்தியும் கல்வி தகுதிகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. சென்னை கிரசன்ட் இன்ஜினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டமும், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் தொழில்துறைப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
மாதவன் : அதிகமான பெண் ரசிகைகளை கொண்ட நடிகர்களில் மாதவன் முக்கியமானவர். தனது அழகால் மட்டுமின்றி, இயல்பான நடிப்புக்காக அறியப்படும் மாதவன் எலக்ட்ரானிக்ஸ் பட்டதாரி ஆவார். மேலும், கோலாப்பூரில் உள்ள ராஜாராம் கல்லூரி மற்றும் மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கிஷிஞ்சந்த் செல்லாராம் கல்லூரியில் பொதுப் பேச்சில் முதுகலைப் பட்டம் பெற்ற திறமையான பேச்சாளரும் கூட. மாதவனின் கல்விப் பயணம் அவரது நடிப்புப் பாத்திரங்களைப் போலவே மாறுபட்டது என்றே சொல்ல வேண்டும்..
விக்ரம் : தென்னிந்தியத் திரையுலகில் ஒரு தலைசிறந்த ஆளுமை சியான், விக்ரம். அந்த கேரக்டாராகவே வாழும் நடிகர் விக்ரம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். நடிகர் விக்ரம் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் மற்றும் சென்னை லயோலா கல்லூரியில் எம்பிஏ பட்டம் பெற்ற சமமான அற்புதமான கல்வி சாதனையைப் பெற்றுள்ளார். இந்த திறமையான தென்னிந்திய நடிகர்கள் திரையுலகில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளனர், ஆனால் அவர்களின் கல்வித் திறமை அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ரீல் மற்றும் நிஜ உலகில் சிறந்து விளங்க முடியும் என்பதை நிரூபிக்கிறது.