ஜன நாயகன் மட்டுமல்ல விஜய் நடித்து வில்லங்கத்தில் சிக்கிய டாப் 4 மூவிஸ் இதோ
சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் விஜய் படங்கள் சந்தித்த சர்ச்சை என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Vijay controversial movies
தளபதி விஜய்யின் கடைசி படமான 'ஜன நாயகன்' எபோ ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இருப்பினும், படம் சர்ச்சைகளில் சிக்கி, அதன் வெளியீட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விஜய் படங்கள் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல, இதற்கு முன்பும் அவரது சில படங்கள் சர்ச்சைகளை சந்தித்துள்ளன. அவற்றைப் பற்றி இங்கே காணலாம்.
மெர்சல்
தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் தான் அதிக சர்ச்சைகளில் சிக்கியது. படத்தில் ஜிஎஸ்டி மற்றும் அரசு திட்டங்கள் குறித்த கருத்துகள் இடம்பெற்றிருந்ததால், அரசியல் அமைப்புகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தன. சில தலைவர்கள் வசனங்களை நீக்கக் கோரினர். இருப்பினும், படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று சூப்பர்ஹிட்டானது.
துப்பாக்கி
விஜய்யின் 'துப்பாக்கி' படமும் சர்ச்சைகளில் இருந்து தப்பவில்லை. இப்படத்தின் சில காட்சிகள் ஒரு வெளிநாட்டுப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தயாரிப்பாளர்களுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், இப்படம் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
சர்கார்
விஜய்யின் 'சர்கார்' படத்தில் வாக்குப்பதிவு மற்றும் அரசியல் அமைப்பு தொடர்பான காட்சிகள் இருந்ததால், அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. படத்தின் போஸ்டர்கள் மற்றும் திரையரங்குகளுக்கு வெளியேயும் போராட்டங்கள் நடந்தன. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஆனது.
தலைவா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தளபதி நடித்த படம் தலைவா. இப்படத்தின் போஸ்டரில் டைம் டூ லீடு என்கிற வசனம் இடம்பெற்று இருந்தது. அதற்கு அப்போதைய ஆளும் கட்சியான அதிமுக தரப்பிலும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தனர். விஜய் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பின்னரே அப்படம் திரைக்கு வந்தது. தாமதமாக ரிலீஸ் ஆனதால் தலைவா படம் தோல்வியை தழுவியது.
ஜன நாயகன்
இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் ஜன நாயகன். எச்.வினோத் இயக்கிய இப்படத்திற்கு எதிராக சென்சார் போர்டு வழக்கு தொடர்ந்துள்ளதால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதன் வழக்கு ஜனவரி 19ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

